games

img

விளையாட்டு...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - காலிறுதியில் இந்தியாவின் போபண்ணா - சீனாவின் ஜங் ஜோடி

113 ஆண்டுகால பழமையான ஆஸ்திரேலிய ஓபன் கிராண் ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல் போர்ன் நகரில் நடைபெற்று வரு கிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடு முறை நாளான ஞாயிறன்று அன்று நடை பெற்ற கலப்பு இரட்டையர் பிரிவு  2ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் போபண்ணா - சீனாவின் ஜங் ஜோடி, மோனோகோவின் ஹுகோ நைஸ் -  அமெரிக்காவின் டவுன்ட்சென்ட் ஜோடி யை எதிர்கொண்டது. ஹுகோ  - டவுன்ட் சென்ட் ஜோடி போட்டி தொடங்கும் முன்பே திடீரென காயம் காரணமாக வெளியேற, அதிஷ்ட வாய்ப்புடன் இந்தியாவின் போபண்ணா - சீனா வின் ஜங் ஜோடி காலிறுதிக்கு முன் னேறியது.  அதிரடியில் மிரட்டும் சபலென்கா மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் முத லிடத்தில் உள்ள பெலாரஸ் வீராங் கனை சபலென்கா, தரவரிசையில் 14 ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் ஆன்டிரிவாவை எதிர்கொண்டார். தனது அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய சப லென்கா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் ஆன்டிரிவாவை புரட்டியெடுத்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள அமெரிக்கா வின் கோகா கவுப், தரவரிசையில் இல்லாத முன்னணி வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பென்கிச்சை எதிர் கொண்டார். 5-7, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் கோகா கவுப் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். காலிறுதியில் அல்காரஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 3 ஆவது இடத்தில் உள்ள அதிரடிக்கு பெயர் பெற்ற ஸ்பெயினின் அல்காரஸ், தரவரிசையில் 15ஆவது இடத்தில் உள்ள பிரிட்டனின் டிராப்பரை எதிர் கொண்டார். 7-5, 6-1 என்ற செட் கணக்கில் அல்காரஸ் முன்னணியில் இருந்த பொழுது, டிராப்பர் காயம் காரணமாக வெளியேறினார். இதன்மூலம் அதிர்ஷ்ட வாய்ப்புடன் அல்காரஸ் காலிறுதிக்கு தகுதி பெற்றார். அதே போல தரவரிசையில் 14ஆவது இடத்தில் அமெரிக்காவின் பவுல், தரவரிசையில் இல்லாத ஸ்பெயினின் டேவிடோனோவிச்சை  6-1,6-1,6-1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கம்பீரை புறந்தள்ளிய  அஜித் அகார்கர், ரோகித் சர்மா

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணி தேர்வு கூட்டம் ஜனவரி 18ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு   துவங்கியது. சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற இந்த கூட்டத்தில்  தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும், தேர்வுக்குழுத் தலை வர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவுக்கும் இடையே துணை கேப்டனாக யாரை நியமிப்பது என்பது பற்றி நீண்ட நேர விவாதம் நடந்ததாக தெரிகிறது. அஜித் அகார்கர், ரோகித் சர்மா துணை கேப்டனாக சுப்மன் கில் பெயரை முன் மொழிந்து இருந்தனர். ஆனால் அதை கவுதம் கம்பீர் ஏற்க மறுத்ததாகவும், ஹர்திக் பாண்டியாவை துணை கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அஜித் அகார்கர் மற்றும் ரோகித் சர்மா இதை மறுத்து விட்டனர். அதே போல மாற்று விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனை தேர்வு செய்ய வேண்டும் என கவுதம்  கம்பீர் கேட்டு இருக்கிறார். ஆனால், ரிசப் பண்ட் தான் சரியான தேர்வாக இருப்பார் என அஜித் அகார்கர் திட்டவட்டமாக கூறிவிட்டாராம். மொத்தத்தில் அஜித் அகார்கர், ரோகித் சர்மா ஆகிய இருவரும் கம்பீரை புறந்தள்ளியுள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

டிரெண்டிங் வாய்ஸ்

இது கேரளா கிரிக்கெட் சங்கம் மற்றும் சஞ்சு சாம்சன் இடையேயான வருத்தமான கதை  ஆகும். சையத் முஸ்டாக் அலி மற்றும் விஜய் ஹசாரே தொடர்களுக்கான இடையேயான பயிற்சி கேம்பில் பங்கேற்க மாட்டேன் என்று  முன்கூட்டியே சஞ்சு சாம்சன், கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் விஜய் ஹசாரேவுக்கான கேரள அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதோடு, இப்போது இந்திய கிரிக்கெட் அணியில் இருந்தும் வெளியேற்றப் பட்டுள்ளார். இந்த பேட்ஸ்மென் ஹசாரேவில் (விஜய் ஹசாரேவில்) 212 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளை யாடி சராசரியை 56.66 (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக விளையாடிய போட்டியின் சதத்தையும் சேர்த்து) என்று வைத்துள்ளார். இப்போது அவரது எதிர்காலத்தை கிரிக்கெட் சங்க  நிர்வாகி களின் ஈகோ சிதைத்துள்ளது. அதோடு இந்த ஈகோ விஜய் ஹசாரேவில் கேரளா அணியை காலிறுதிக்கு கூட தகுதி பெற வைக்கவில்லை. இது கவலையாக இல்லையா?