games

img

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை – அபிஷேக் சர்மா முன்னேற்றம்!

 

ஐசிசி டி20  பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா  2ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் 4 -1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை இழந்தது. இத்தொடரில், இந்திய அணி தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா, 5 போட்டிகளிலும் சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக 5ஆவது டி20 போட்டியில் அதிரடியாக சதமடித்த அபிஷேக், 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய அபிஷேக் சர்மா டி20 தரவரிசையில் 38 இடங்கள் முன்னேறி 2ஆம் இடத்தை பிடித்துள்ளார். திலக் வர்மா 3ஆம் இடத்துக்கு பின் தள்ளப்பட்டார். ஆஸிதிரேலியாவின் அதிரடி மன்னன் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார்.