தில்லியில் இன்று காலை 7 மணிக்கு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, 8.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
தில்லியில் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேந்த மொத்தம் 699 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலையொட்டி 30 ஆயிரம் போலீசார், 22 ஆயிரம் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி, தில்லியில் மொத்தம் 8.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகபட்சமாக முஸ்தபாபாத் தொகுதியில் 12.43% வாக்குகளும், குறைந்தபட்சமாக சாந்தினி சவுக் தொகுதியில் 4.5% வாக்குகளும் பதிவாகியுள்ளன.