சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு
நெதர்லாந்து நாட்டின் விஜிக் ஜீ நகரில் நடைபெற்று வந்த 87ஆவது சர்வதேச செஸ் போட்டி யின் இறுதிச் சுற்றில் தமிழ்நாட்டின் முன்னணி வீரரும், உலக சாம்பிய னுமான குகேஷ் மற்றும் தமிழ்நாட்டின் மற்றொரு முன்னணி வீரரான பிரக்ஞானந்தா மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரக்ஞானந்தா குகேஷுக்கு அதிர்ச்சி அளித்து நெதர்லாந்து ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்தை கைப்பற்றினார். குறிப்பாக இந்த பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியரானார் பிரக்ஞானந்தா. இதற்குமுன் இந்தியாவின் சிறந்த செஸ் வீரரான தமிழ்நாட்டின் விஸ்வ நாதன் ஆனந்த் நெதர்லாந்து ஓபன் பட்டத்தை 5 முறை வென்றுஇருந்தார். இந்நிலையில், செவ்வாயன்று காலை சென்னை விமானநிலையத் திற்கு பிரக்ஞானந்தா வந்து இறங்கி னார். அவருக்கு விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட் டது. பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “பெருமை வாய்ந்த நெதர்லாந்து டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் போட்டி யில் பட்டம் வென்றது சந்தோஷமாக இருக்கிறது. 2025ஆம் ஆண்டில் பங்கேற்ற முதல் போட்டியிலேயே முதல் இடத்தை பிடித்தது மகிழ்ச்சி யாக இருக்கிறது. 2024இல் என்னால் சரியாக பர்பாமன்ஸ் செய்ய முடிய வில்லை. இந்தாண்டு தொடக்கத்தி லேயே எனக்கு வெற்றி கிடைத்திருக் கிறது” என அவர் கூறினார்.
விமர்சனங்களுக்கு வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்த பிரக்ஞானந்தா
சென்னையில் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடருக்குப் பிறகு தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா சற்று சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்தார். குறிப்பாக 2024ஆம் ஆண்டில் பிரக்ஞானந்தாவின் ஆட்டம் சற்று மோசம் தான். பார்ம் இல்லாமல் வெற்றிக்காக கடுமையாக போராடினார். இதனால் பிரக்ஞானந்தாவின் பார்ம் அவ்வளவு தான் ; இனி அவரால் சாதிக்க வாய்ப்பில்லை என்றெல்லாம் செய்திகள் மூலம் விமர்சனங்கள் வெளியாகின. இத்தகைய சூழலில் நெதர்லாந்து ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்தை கைப்பற்றி விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் பிரக்ஞானந்தா.
ரொனால்டோ 700
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரும், போர்ச்சுக் கல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபிய கிளப் அணியான நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், ஆசிய சாம்பியன்ஸ் லீக் தொடரில் அல் நாசர் அணி, அல் வாஸ்லை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோ 2 கோல்களை அடித்து தனது 700ஆவது கிளப் வெற்றியைக் கொண்டாடினார்.
1000 கோல்களை நெருங்கும் ரொனால்டோ
அல் நாசர் அணிக்காக 2 கோல்கள் அடித்ததன் மூலம் கால்பந்து உலகில் ரொனால்டோ அடித்த மொத்த கோல்களின் எண்ணிக்கை 923ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 9 ஆண்டுகள் மட்டும் அவர் 460 கோல்களை அடித்துள்ளார். அதாவது 30 வயது வரை 463 கோல்களும், 30 வயதுக்குப் பிறகு 460 கோல்களை அடித்து அசத்தி யுள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி (புதன்கிழமை) 40 வயதில் அடி எடுத்துவைக்கிறார். கால்பந்து விளையாட்டு வரலாற்றில் 900 அதிகாரப்பூர்வ கோல்களுக்கு மேல் அடித்த ஒரே வீரர் என்ற பெயரை ரொனால்டோ தொடர்ந்து தக்க வைத்து வருகிறார். குறிப்பாக கடந்த 150 ஆண்டுகளில் வெறும் 24 வீரர்கள் மட்டுமே தங்கள் வாழ்க்கையில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட கோல்களை அடித்துள்ளனர். ரொனால்டோ மற்றும் லயோனல் மெஸ்ஸி (850 - அர்ஜெண்டினா), ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி (600 - போலந்து), லூயிஸ் சுவரேஸ் (500 - உருகுவே) ஆகிய 4 பேர் மட்டுமே 500 கோல்கள் அடித்து உயரத்தில் உள்ள னர் என்பது குறிப்பிடத்தக்கது.