games

img

விளையாட்டு...

நெதர்லாந்து ஓபனில் மிரட்டிய தமிழர்கள்

உலக சாம்பியன் குகேஷிற்கு அதிர்ச்சி அளித்த பிரக்ஞானந்தா

நெதர்லாந்து நாட்டின் விஜிக் ஜீ நகரில் நடை பெற்று வந்த 87ஆவது சர்வதேச செஸ் போட்டி  ரவுண்ட் ராபின் முறையில் நடைபெற்றது.  இந்த தொடரின் 13 சுற்றுகளின் முடிவில் தமிழ்நாட்டின் முன்னணி வீரரும், உலக சாம்பியனுமான குகேஷ் மற்றும்  தமிழ்நாட்டின் முன்னணி வீரரான பிரக்ஞானந்தா ஆகிய இரு வரும் தலா 8.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தனர். எனினும் 14ஆவது சுற்றில் அர்ஜூன் எரிகைசியிடம் குகேஷும், கிராண்ட்மாஸ்டர் வின்சென்ட் கீமரிடம் பிரக்ஞானந்தாவும் தோல்வியடைந்தனர். 14ஆவது சுற்றுகளின் முடிவில் குகேஷ் மற்றும் பிரக் ஞானந்தா சம புள்ளிகளுடனேயே இருந்ததால், டை பிரேக்கர் சுற்று நடைபெற்றது. அதில் குகேஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரக்ஞானந்தா நெதர்லாந்து ஒபன் சர்வதேச மாஸ்டர்ஸ் பட்டத்தை வென்றார். நெதர்லாந்து ஓபன் பட்டத்தை 5 முறை வென்ற இந்தியாவின் சிறந்த செஸ் வீரரான தமிழ் நாட்டின் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பிறகு, இந்த பட்டத்தை வெல்லும் இரண்டாவது இந்தியரானார் பிரக்ஞானந்தா.

கிளம்பி விட்டது சேவாக் 2.0

பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் பட்டையை கிளப்பும் அபிஷேக் சர்மா

இந்திய கிரிக்கெட்டில் பலர் அதிரடியாக விளையாடினா லும் முன்னாள் தொடக்க வீரர் சேவாக் போன்று பயமின்றி அதிரடியாக யாராலும் விளையாட முடியாது. யார் பந்து வீசினாலும் எனக்கென்ன என்று தனது அதிரடி பேட்டிங் மூலம் ருத்ரதாண்டவம் ஆடக் கூடியவர். சேவாக்கிற்குப் பிறகு ரோகித் சர்மா மட்டுமே அதிரடியாக பேட்டிங் செய்தார். ஆனாலும் சேவாக் போன்று என  சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரோகித் சர்மா அதிரடியில் ஆக்சனை வெளிப்படுத்தவில்லை. இந்நிலையில், சேவாக்கை நினைவூட்டும் வகையில் அவரை போலவே அதிரடியில் மிரட்ட இந்திய அணியில் புதிதாக ஒரு இளம் புயல் கிளம்பியுள்ளது. அந்த புயலின் பெயர் அபிஷேக் சர்மா (25). பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அபி ஷேக் சர்மாவை 2024 ஐபிஎல் தொட ருக்கு பின்பு தான் அவரை கிரிக்கெட் உலகிற்கே தெரியும். 2024 ஐபிஎல் சீசனில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டு டன் இணைந்து தொடர் முழுவதும் அதிரடி பேட்டிங்கால் ஐபிஎல் தொடரை கிறங்கடித்தவர்.  இவரது அபார ஆட்டத்தை கண்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரி யம் (பிசிசிஐ) சர்வதேச டி-20 போட்டி களில் விளையாட வாய்ப்பு அளித்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்திக்கொண்ட அபிஷேக் சர்மா மிக அருமையாக விளையாடி வருகிறார். ஞாயிறன்று நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி டி-20  போட்டியில் சேவாக் போல பய மின்றி விளையாடி 13 சிக்சருடன் 54  பந்துகளில் 135 ரன்கள் குவித்து மிரட்டி னார். இவரது ஆட்டத்தை கண்ட  ரசிகர்கள் குட்டி சேவாக் இந்திய அணிக்குள் புகுந்துள்ளது என மீம்ஸ் மழை பொழிந்து வருகின்றனர்.