games

img

விளையாட்டு...

இந்திய அணியின் உள்விவகாரங்கள் கசிவது எப்படி? 

பயிற்சி ஆட்டங்களை உளவு செய்வது யார்?

இந்தியா-ஆஸ்திரேலிய அணி கள் மோதி வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4ஆவது போட்டி டிசம்பர் 26ஆம் தேதி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் (ஆஸ்திரேலியா) நடைபெறுகிறது.  

பாக்சிங் டே என்ற பெயரில் நடை பெறும் இந்த டெஸ்ட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தின் பொழுது பந்து  தாக்கி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கை மற்றும் முழங்கா லில் காயம் அடைந்ததாகவும், அவர் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என இந்திய  ஊடகங்களில் செய்திகள் வெளியா கின. இந்த விவகாரம் ரசிகர்கள் மத்தி யில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  

இந்நிலையில், காயம் தொடர்பாக ரோகித் சர்மா செவ்வாய்க் கிழமை அறிக்கை வெளியிட்டார். அதில், “என் முழங்கால் நன்றாக இருக்கிறது. யார் எந்த வரிசையில் பேட் செய்கிறார்கள் என்ற கவலை தேவையில்லை” என அவர் கூறினார்.

உளவு பார்ப்பது யார்?

ரோகித் சர்மா மெல்போர்னில் விளையாடுவது நல்ல விசயம் தான் என்றாலும், பயிற்சி ஆட்டங்களில் கூட இந்திய வீரர்களின் காயம் மற்றும் இதர சம்பவங்களின் விசயங்கள் எப்படி கசிகிறது? இதை வெளியிடு கிறது யார்? ஆஸ்திரேலிய அணியில் பயிற்சியின் பொழுது வீரர்கள் காயம் அடைந்தாலும் ஏன் செய்திகள் வெளி யாகவில்லை? இந்திய அணியின் குழுவில் யாரும் மறைமுகமாக ஊட கங்களுக்கு உதவி செய்கின்றனரா? என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.

வீரர்கள் டிரெஸ்ஸிங் ரூமில் வெளி யாட்கள் நுழைவது கண்டிக்கத்தக்க விஷயம் ஆகும். அதே போல வீரர்கள் பயிற்சி பெறும் மைதானத்தில் வெளியாட்கள் நுழைவதற்கு அனுமதி கிடையாது. ஊடகங்கள் பயிற்சி பெறும் இடங்களுக்கு சென்று ஒரே ஒரு  முறை புகைப்படம் மற்றும் பேட்டி எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி பயிற்சி பெறும் மைதானங்களில் வெளி யாட்கள் நீண்ட நேரம் இருக்க முடி யாது. அமித் ஷா மகன் ஜெய் ஷா பிசிசிஐக்குள் வந்த பின்பு தான் இந்திய அணியின் டிரெஸ்ஸிங் ரூம் விவகாரம் கூட சாதாரண விசயமாக  கசிந்து  வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி யுள்ளது.

நாளை அதிகாலை “பாக்சிங் டே” டெஸ்ட்
இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : காலை 5:30மணி(வியாழன்)
இடம் : மெல்போர்ன், ஆஸ்திரேலியா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)
(கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நடைபெறும் கிரிக்கெட் போட்டிகள் 
பாக்சிங் டே என அழைக்கப்படுகின்றன)

கேல் ரத்னா விருது :  மனு பாக்கர் புறக்கணிப்புக்கு வலுக்கும் கண்டனம்

விளையாட்டு வீரர்களின் சாத னைகளைக் கொண்டாடு வதற்கும் கவுரவிப்பதற்கும் ஒவ்வொரு ஆண்டும் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை வழங்கி வருகிறது.

நாட்டிலேயே கேல் ரத்னா தான் மிக உயர்ந்த விருது ஆகும். இந்நிலையில், 2024ஆம் ஆண்டுக் கான விருது பெற தகுதியுடைய மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன் ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோரது பெயர்  இடம் பெற்றுள்ளது.  

ஆனால் இந்தியாவுக்காக பாரீஸ் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற மனு பாக்கரின் பெயர் பட்டியலில் இல்லை. மனு பாக்கரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டிய லில் இல்லை என்பதற்கான காரணமாக, அவர் விருதுக்கு விண்ணப்பிக்கவில் லை என்று விளையாட்டு அமைச்ச கத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இருப்பினும் மனுவின் குடும்பத்தினர், அவர் உண்மையிலேயே தனது விண்ணப்பத்தை அனுப்பியதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வென்று நாட்டிற்காக பெருமை சேர்த்த  மனு பாக்கருக்கு கேல் ரத்னா விருது அளிக்காமல் புறக்கணிக்கப்படுவதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.