அடுத்த மூன்று மாதங்களுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் விளையாட முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது, இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இக்காயத்திற்கு அடுத்த மாதம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதால், அடுத்த 3 மாதங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இந்தியாவுக்கு எதிரான தொடர்கள் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணியை, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. அந்த அணிகளில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.