ஐரோப்பிய கிளப் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து 2025
15 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் வெளியேறியது
கால்பந்து உலகில் மிக உயரிய சாம்பியன்ஸ் லீக் தொடர்களில் ஒன்றான ஐரோப்பிய கிளப் சாம்பி யன்ஸ் லீக் தொடரின் நடப்பாண்டு சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி யுள்ளது. இந்த தொடரின் காலிறுதி ஆட்டத்தில் (கடைசி லெக்) 15 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி (ஸ்பெயின் கிளப்), இதுவரை சாம்பியன் பட்டமே வெல்லாத அர்செனல் (இங்கிலாந்து கிளப்) அணிகள் மோதின. ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற்ற முதல் லெக்கில் (முதல் பகுதி) யாரும் எதிர்பாராத வகையில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணி 3-0 என்ற கணக்கில் அபார வெற்றியுடன் முன்னிலை பெற் றது. அர்செனல் அணியை விட ரியல் மாட்ரிட் பலமானது என்பதால், இரண் டாம் லெக்கில் ரியல் மாட்ரிட் கண்டிப்பாக பதிலடி கொடுத்து அரையிறுதிக்கு முன் னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அன்று அதிகாலை அர்செனல் - ரியல் மாட்ரிட் அணிக ளுக்கு எதிரான இரண்டாம் லெக் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தி லும் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்செனல் 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு லெக் ஆட்டங்களிலும் சேர்த்து 5-1 என்ற கோல் கணக்கில் அர்செனல் அரையிறு திக்கு முன்னேறியது. 15 முறை சாம்பிய னான ரியல் மாட்ரிட் அணி மோசமான வர லாறுடன் காலிறுதியிலேயே வெளி யேறியது.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர், டி.திலீப் நீக்கம்?
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் பேட்டிங் பயிற்சியாள ராக இருப்பவர் அபிஷேக் நாயர். இந்திய அணியின் முன்னாள் வீரரான இவர் 2024ஆம் ஆண்டு முதல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அதே போல பீல்டிங் பயிற்சியாளராக திலீப் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், திலீப் - அபிஷேக் நாயருக்கு இடையே சமீப காலமாக மோதல் நீடித்து வருவதாகவும், இதனால் இருவரையும் பயிற்சியாளர் குழுவில் இருந்து நீக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அபிஷேக் நாயர், திலீப் ஆகிய இருவரும் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின்பு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் 2025
இன்றைய ஆட்டம் பெங்களூரு - பஞ்சாப் சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜியோ ஸ்டார் (ஓடிடி)
நேரம் : இரவு 7:30 மணி இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா