games

img

விளையாட்டு...

செஸ் விளையாட்டில் உலக சாதனை படைத்த 9 வயது இந்திய சிறுவன்

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் தேவான்ஷ் நாரா. இவர் செஸ் விளையாட்டின் “சூப்பர் பாஸ்ட் செக்மேட்” பிரிவில் 175 செக்மேட் புதிர் களுக்கு அதிவிரைவாக தீர்வு கண்டு உலக சாதனை படைத்துள்ளார். இவரது சாதனை லண்டனின் மதிப்புமிக்க உலக சாதனை புத்தகத்தால் (WORLD BOOK RECORDS) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சந்திரபாபு பேரன்

ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் மகனும், மாநில அமைச்சருமான நாரா லோகேஷின் மகன் தான் தேவான்ஷ்  நாரா. அதாவது சந்திரபாபுவின் பேரனான தேவான்ஷ் நாரா  “சூப்பர் பாஸ்ட் செக்மேட்” பிரிவில் உலக சாதனையுடன் வரலாறு படைத்துள்ளார். பிரபல செஸ் பயிற்சியாளர் கே.ராஜசேகர் வழிகாட்டுதல் மூலமாக தான் தேவான்ஷ் நாரா இந்த உலக சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைவிட்டுச் சென்ற கேரி கிறிஸ்டன், கில்லெஸ்பி

பாகிஸ்தானை மீண்டும் பார்மிற்கு கொண்டு வந்த அனுபவமில்லாத பயிற்சியாளர்

உள்கட்டமைப்பு மோதல் காரணமாக பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் (தென் ஆப்பிரிக்கா), பந்துவீச்சு பயிற்சி யாளர் கில்லெஸ்பி (ஆஸ்திரேலியா) ஆகியோர் சமீபத்தில் தங்களது பதவி யை ராஜினாமா செய்து அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பினர். இதனால் பாகிஸ்தான் அணி ஆளில்லா விமானத்தை போல தனியாக பறந்து கொண்டு இருந்தது.உள்கட்டமைப்பு மோதல் காரணமாக பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் (தென் ஆப்பிரிக்கா), பந்துவீச்சு பயிற்சி யாளர் கில்லெஸ்பி (ஆஸ்திரேலியா) ஆகியோர் சமீபத்தில் தங்களது பதவி யை ராஜினாமா செய்து அவரவர் சொந்த நாட்டுக்கு திரும்பினர். இதனால் பாகிஸ்தான் அணி ஆளில்லா விமானத்தை போல தனியாக பறந்து கொண்டு இருந்தது.

இத்தகைய சூழலில் அணியின் இடைக்கால பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆக்யூப் ஜாவேத்தை நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். ஜாவேத் பிஎஸ்எல்அணிகளில்பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என்ற நிலையில், ஜாவேத் வருகை பாகிஸ்தான் வீரர்களுக்கு சுதந்திரமான ஆட்ட திறனை வெளிப்படுத்த வழிவகுத்துள்ளது.

வீரர்களுக்கு அழுத்தம் தராமல் ஜாவேத் வித்தியாசமான முறையில் பயிற்சி அளிக்க, வெறும் ஒன்றரை மாதத்தில் மீண்டும் சூப்பர் பார்முக்கு திரும்பியுள்ளது பாகிஸ்தான் அணி. 2 நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் 3-0 என்ற கணக்கில் ஒயிட்  வாஷ் சாதனையுடன் ஒருநாள் தொடரை வென்று அசத்தியுள்ளது பாகிஸ்தான் அணி. பந்துவீச்சு பயிற்சியாளர் இல்லா மலும், பெரியளவில் சர்வதேச அனு பவம் (பயிற்சியாளர்) இல்லாமலும் தனி ஒருவராக பாகிஸ்தான் அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்த ஜாவேத்துக்கு கிரிக்கெட் உலகில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

3 பிரம்மாண்ட சம்பவங்கள் ; ஜாவேத் கலக்கல் 

ஜாவேத் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்பு 3 முக்கிய சம்பவங்கள் பாகிஸ்தான் அணிக்கு முக்கிய பலமாக மாறியுள்ளது. 

1.ஒருநாள் மற்றும் டி-20 கேப்ட னாக நியமிக்கப்பட்டுள்ள ரிஸ்வான் நல்ல நிலையில் அணியை கவனித்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டில் பாகிஸ்தான் அணி அருமையாக விளை யாடி அடுத்தடுத்து தொடர்களை கைப் பற்றி வருகிறது. இதற்கு ஜாவேத்தின் ஆலோசனை தான் காரணம் ஆகும்.

2. பயிற்சியாளர் உடனான (கேரி கிரிஸ்டன்) மோதல் காரணமாக பார்ம் பிரச்சனையில் சிக்கிய பாபர் அசாம் ரன் குவிக்க முடியாமல் திணறினார். ஆனால் புதிய பயிற்சியாளர் ஜாவேத்தின் பயிற்சியின் கீழ் பாபர் அசாம் மீண்டும் சூப்பர் பார்மில் நுழைந்து பட்டையை கிளப்பி வருகிறார்.

3. பாபர் அசாம் போலவே பாகிஸ்தான் அணிக்கு புதுமுக வீரர் கிடைத்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கும் சைம் அயூப் என்ற இளம்  வீரர் தென் ஆப்பிரிக்கா அணிக்கெதி ரான ஒருநாள் தொடரில் 2 சதமடித் தார். வேகப்பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப அதிரடி யாக விளையாடி வரும் சைம் அயூப் பாகிஸ்தான் அணியின் முன்னாள் அதிரடி வீரர் சயீத் அன்வர் போல தூள் பரத்தி வருகிறார்.