games

img

இந்தியாவுக்கு எதிரான தொடர் – இங்கிலாந்து அணி அறிவிப்பு!

இந்தியாவுக்கு எதிரான தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வருகிற ஜனவரி 22 ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோ ரூட் மீண்டும் இடம் பிடித்துள்ளார். அவர் கடைசியாக இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடியிருந்தார். அதன் பின், தற்போது மீண்டும் ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது, பென் ஸ்டோக்ஸுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது அறிமுகமான ரிஹான் அகமது, டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ளார்.

ஓடிஐ தொடருக்கான இங்கிலாந்து அணி

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், ஜோ ரூட், சாக்யூப் மஹ்முத், பில் சால்ட், மார்க் வுட்.

டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி

ஜோஸ் பட்லர் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கோப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடான் கார்ஸ், பென் டக்கெட், ஜேமி ஓவர்டான், ஜேமி ஸ்மித், லியம் லிவிங்ஸ்டன், அடில் ரஷீத், சாக்யூப் மஹ்முத், பில் சால்ட், மார்க் வுட்.