games

img

தான் நலமுடன் இருப்பதாக ஹீத் ஸ்ட்ரீக் விளக்கம்!

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் நலமுடன் இருப்பதாக அவரே விளக்கம் அளித்துள்ளார்.
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தலைசிறந்த பந்து வீச்சாளருமான ஹீத் ஸ்ட்ரீக், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கு பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர். 
இந்த நிலையில், இதுபோன்ற வதந்திகளை பரப்பும் முன் மக்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும் என்றும், தான் நலமுடன் இருப்பதாகவும், புற்றுநோயில் இருந்து மீண்டு வருவதாகவும் ஹீத் ஸ்ட்ரீக் தெரிவித்துள்ளார்.