games

img

விளையாட்டு...

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு தலைநகர் சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு வீரர்  அரவிந்த் சாம்பியன்

மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என 2 பிரிவு களாக நடைபெற்று வரும் இந்த செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மாஸ்டர்ஸ் பிரிவின் இறுதிச் சுற்றில் (7ஆவது சுற்று) தமிழ்நாடு வீரர் அரவிந்த் சிதம்பரம், அமெரிக்காவின் லோ வோனை எதிர்கொண் டார். டைபிரேக்கர் வரை நீண்ட இந்த ஆட்டத்தில் 2.0 என்ற புள்ளிக் கணக்கில் அரவிந்த் சிதம்பரம் (மொத்தம் 4.5 புள்ளிகள்) வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

பிரணவிற்கு பட்டம்

சேலஞ்சர்ஸ் பிரிவின் இறுதிச் சுற்றில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வைஷாலி, கர்நாடகாவைச் சேர்ந்த பிரணவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.  7 சுற்றுகளாக நடைபெற்ற சேலஞ்சர்ஸ் பிரிவின் இறுதிச் சுற்றின் முடிவில் 4இல் வெற்றி, 3இல் டிரா என 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து பிரணவ் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன்மூலம் அடுத்தாண்டு நடைபெறவுள்ள மாஸ்டர்ஸ் தொடருக்கு பிரணவ் தேர்வாகியுள்ளார். மாஸ்டர்ஸ் தொடர் 2700 பிடே (சர்வதேச புள்ளிகளை) புள்ளிகளை பெற்ற வீரர்-வீராங்கனைகளும், சேலஞ்சர்ஸ் தொடர் 2500 பிடே புள்ளிகளை பெற்ற வீரர்-வீராங்கனைகளும் விளையாட தகுதி ஆனவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5 வேகம் : 24 மணிநேர பார்ம்  ஆஸ்திரேலியாவை சமாளிக்குமா இந்தியா?

தலைமை பயிற்சியாளர் மாற்றப்பட்டுள்ளதால் இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது நல்ல பார்மில் உள்ள சிறந்த வீரர்களை நீக்கிவிட்டு, தனக்கு வேண்டப்பட்ட மற்றும் தான் பயிற்சி அளித்த கொல்கத்தா ஐபிஎல் அணியில் விளையாடிய வீரர்களை இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்.  அதாவது ஐபிஎல் திறமை என்ற ஒற்றை வார்த்தையுடன் போதுமான சர்வதேச அனுபவம் இல்லாத இளம் வீரர்களை களமிறக்கியதால் இந்திய அணி நியூஸிலாந்து அணியிடம் “ஒயிட் வாஷ் (தொடர் முழுவதும் தோல்வி)” அவப்பெயருடன் அடி மேல்  அடி வாங்கியது. இதிலிருந்து கவுதம் கம்பீர் பாடம் கற்றுக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூஸி லாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணிக்குழுவே (90% அளவில்) அடுத்து வரவிருக்கும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகளை கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரிலும் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய மைதானங்கள் அனைத்தும் வேகப்பந்துவீச்சிற்கு சாதகமானது ஆகும். குறிப்பாக அந்நாட்டு வீரர்கள் சொந்த மண்ணில் 24 மணிநேரம் கூட தொடர்ச்சியான சூப்பர் பார்மில் விளையாடும் உடல்நிலை மற்றும் மனநிலையைக் கொண்டவர்கள். இந்திய அணிக் கெதிரான டெஸ்ட் தொடரில் ஆஸ்தி ரேலிய அணி சூப்பர் பார்மில் உள்ள 5  வேகப்பந்துவீச்சாளர்களுடன் கள மிறங்குகிறது. பேட்டிங் பிரிவு பிரம்மா ண்ட பலம். இதனால் ஆஸ்திரேலியா வை எந்த விதத்தில் இந்திய அணி எதிர்கொள்ளும் என்பதை நவம்பர் 22ஆம் தேதி அன்று தெரிந்து கொள்ள லாம். (நவம்பர் 22 : இந்தியா - ஆஸ்தி ரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடங்கும் நாள்)

இன்றைய ஆட்டங்கள்

இரண்டு ஆட்டங்களும்:  நொய்டா மைதானம், உத்தரப்பிரதேசம்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஓடிடி)