ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - காலிறுதியில் சுவிட்டோலினா
113 ஆண்டுகால பழமையான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலை யில், திங்களன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்ட த்தில் தரவரிசையில் 28ஆவது இடத்தில் உள்ள உக்ரைனின் சுவிட்டோ லினா, தரவரிசையில் இல்லாத ரஷ்யாவின் வெரோனிக்காவை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இதே பிரிவின் மற்றொரு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில் இல்லாத ஜெர்மனியின் லைசை எதிர்கொண் டார். அதிரடி ஆட்டத்துடன் ருத்ர தாண்டவம் ஆடிய ஸ்வியாடெக் 6-0, 6-1 என்ற செட் கணக்கில் லைசை புரட்டி யெடுத்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி னார். காலிறுதிக்கு முன்னேறிய முன்னணி வீராங்கனைகள் : கீஸ் (அமெரிக்கா), நவர்ரோ (அமெரிக்கா)
மோன்பில்ஸ் அவுட்
ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் இல்லாத முன்னணி வீரரான பிரான்சின் மோன்பில்ஸ், தரவரிசையில் 21ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் செல்டானை எதிர்கொண்டார். இரு வீரர்களும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாக நகர்ந்தன. 7-6 (7-3), 6-7 (3-6), 4-6 (7-2), 1-0 என்ற கணக்கில் செல்டான் முன்னணியில் இருந்த பொழுது காயம் காரணமாக மோன்பில்ஸ் வெளியேறினார். இதனால் அதிர்ஷ்ட வாய்ப்புடன் செல்டான் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். காலிறுதிக்கு முன்னேறிய முன்னணி வீரர்கள் : சின்னர் (இத்தாலி), லோரன்சோ (இத்தாலி)
ஐபிஎல் 2025 லக்னோ அணி கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம்
2025ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. தற்போது ஐபிஎல் அணிகள், கேப்டன் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி கடந்த வாரம் பஞ்சாப் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், லக்னோ அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப் பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் லக்னோ அணி ரிஷப் பண்டை ரூ.27 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையும் ரிஷப் பண்டிடம் உள்ளது. ரிஷப் பண்ட் ஏற்க னவே தில்லி அணியின் கேப்டனாக இருந்ததால் அந்த அனுபவம் லக்னோ அணிக்கு நல்ல பலனை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 அணிகள் இன்னும் அறிவிக்கவில்லை ஐபிஎல் தொடரில் லக்னோ அணி 2022 முதல் விளையாடி வருகிறது. 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், லக்னோ அணிக்கு கே.எல். ராகுல் தலைமை தாங்கினார். அவரது தலை மையின் கீழ் 2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் லக்னோ அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் கடந்த சீசனில் லக்னோ அணி மோச மாக விளையாடி லீக் சுற்றிலேயே வெளி யேறியது. பிறகு கே.எல்.ராகுலிடம், அணியின் உரிமையாளர் கோயங்கா மைதானத்திலேயே கோபத்தை காட்டி யது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதன் காரண மாகவே 2025 சீசன் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை லக்னோ அணி வாங்கவில்லை. எனினும் ரூ.14 கோடிக்கு தில்லி அணியால் கே.எல்.ராகுல் ஏலத்தில் எடுக்கப்பட்டார். மொத்தம் உள்ள 10 அணிகளில் 7 அணிகள் தங்கள் கேப்டன்களை அறிவித்துள்ள நிலையில் பெங்களூரு, கொல்கத்தா மற்றும் தில்லி ஆகிய அணிகள் தங்கள் கேப்டன்களை இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.