ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2025 - அமெரிக்காவின் கவுப் அதிர்ச்சி தோல்வி
113 ஆண்டுகால பழமையான ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகி றது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், செவ்வாயன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள முன்னணி அதிரடி வீராங்கனையான அ மெரிக்காவின் கோகா கவுப், தரவரிசை யில் 11ஆவது இடத்தில் உள்ள ஸ்பெ யினின் படோசாவை எதிர்கொண்டார். படோசாவை விட கவுப் சிறப்பாக விளையாடக்கூடியவர் என்ற நிலை யில், யாரும் எதிர்பாராத வகையில் தொடக்கம் முதலே அதிரடியுடன் ஆதிக்கம் செலுத்திய படோசா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறி னார். 2023ஆம் ஆண்டின் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான கோகா கவுப் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். ஜுவரேவ் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜுவ ரேவ், தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பவுலை எதிர் கொண்டார். ஆரம்ப செட் பாயிண்ட் முதலே வலுவான ஆட்டத்தை வெளிப் டுத்திய ஜுவரேவ் 7-6 (7-1), 7-6 (7-0), 2-6, 6-1 என்ற செட் கணக்கில் பவுலை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற் றார்.
இனி மழை விளையாடும்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களாக மெல்போர்னில் வெயில் கொளுத்தியது. இதனால் போட்டி சிக்கலின்றி நடைபெற்றது. இத்தகைய சூழலில் புதன்கிழமை முதல் மெல்போர்ன் நகரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியா கியுள்ளன. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டினாலும், அரையிறுதி ஆட்டங்கள், இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெறும் மைதானங்கள் உள்ளரங்க வசதி இல்லாதவை (2024இன் கணக்குப் படி) ஆகும். இந்த ஆண்டு உள்ளரங்க வசதி செய்துள்ளதா என்பது குறித்து திடமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகச் சிறந்த வீரர் விராட் கோலி
சவுரவ் கங்குலி ஆதரவு
உலகின் மிகச்சிறந்த கிரிக் கெட் வீரர் விராட் கோலி என சவுரவ் கங்குலி கூறியுள்ளார். மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிசிசிஐ முன்னாள் தலை வரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி பேசுகையில், விராட் கோலி வாழ்நாள் சாதனை படைத்த சிறந்த கிரிக்கெட் வீரர். கிரிக் கெட் விளையாட்டில் 81 சதங்களை அடிப்பது என்பது நம்பமுடியாத ஒன்று. அவர் உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து (ஒருநாள்) வீரர். ஒவ்வொரு வீரருக்கும் பலமும் பலவீனமும் இருக்கும். இங்கிலாந்து சுற்றுப்பயணம் அவருக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும். சாம்பியன்ஸ் டிராபி பற்றி எந்த கவலையும் இல்லை. இந்திய அணியில் உலகின் மிகச் சிறந்த வெள்ளைப் பந்து வீர ராக கோலி இருக்கிறார். ஆஸ்திரேலிய பயணத்தில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்று தெரியும். ஆனால் டி-20 உலகக்கோப்பையில் தோல்வியே பெறாமல் வென்றது. அதேபோல ஒரு நாள் கோப்பையில் இறுதிப் போட்டியில் மட்டுமே இந்தியா தோற்றது. தற்போதைய சூழ்நிலையில் இந்திய அணி சிறந்த வெள்ளைப் பந்து அணியாக இருக்கின்றது. என்னைப் பொறுத்தவரை சாம்பியன்ஸ் டிராபி யின் சிறந்த அணி இந்தியாதான். கோலியை போன்று ரோகித் சர்மா அற்புதமான வெள்ளை பந்து வீரர் ஆவார். சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி யதும் நீங்கள் வித்தியாசமான ரோகித்தை பார்ப்பீர்கள்” என அவர் கூறினார். ரசிகர்கள் மகிழ்ச்சி பிசிசிஐ தலைவராக இருந்த போது கங்குலிக்கும் - விராட் கோலிக்கும் ஆகவே ஆகாது. தற்போதைய சூழ்நிலையில் விராட் கோலியை கங்குலி பாராட்டி இருப்பது ரசிகர்களி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள் ளது.