games

img

விளையாட்டு

டி-20 உலகக்கோப்பையில் “மகாதேவ்” சூதாட்ட செயலி வாட்ஸ் அப், முகநூல் மூலம் செயல்படுவதாக குற்றச்சாட்டு

“மகாதேவ் (Mahadev Bett ing App)” என்பது ஆன்லைன் சூதாட்டத் தளமாகும். இதில் கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுகள் மற்றும் பல்வேறு ‘கேசினோ’ விளையாட்டு களில் பணம் கட்டி விளையாட வழி வகை செய்யப்பட்டது. சவுரப் சந்திரா கர் மற்றும் ரவி உப்பல் ஆகியோரால் ஐக்கிய அரபு அமீரகத்தை தலைமை யிடமாகக் கொண்டு இந்த செயலி இயக்கப்பட்டது.  இந்த செயலி மூலம் ஈட்டப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் பணம், சட்டவிரோத வழிகளில் வெளி நாடுகளுக்கு மாற்றப்பட்டதாக அம லாக்கத்துறை குற்றம் சாட்டியது. மேலும் மென்பொருள் மூலம் விளை யாட்டின் முடிவுகளை மாற்றி யமைத்து, மக்கள் பணத்தை இழக்கச் செய்யும் வகையில் இந்த செயலி வடி வமைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த குற்றச்சாட்டு மற்றும் “இந்தி யா” கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பால், நவம்பர் 2023இல் ஒன்றிய மோடி அரசு மகாதேவ் செயலி உட்பட 22 சட்ட விரோத சூதாட்ட செயலிகளையும், ஜனவரி 2026இன் தொடக்கத்தில் கூட 242 சூதாட்டம் தொடர்பான இதர இணையதளங்களையும் அடுத்த டுத்து முடக்கியது. மோடியின் செயலாளர் குறிப்பாக, மகாதேவ் சூதாட்ட முறைகேட்டில் பிரதமர் அலுவல கத்திற்கு  நேரடி தொடர்பு இருப்ப தாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மோடியின் தனிச்செயலாளர் ஹீரன் ஜோஷி மகாதேவ் செயலியின் உரிமை யாளர்களுக்கும், அரசு அதிகாரிகளு க்கும் இடையே பாலமாகச் செயல் பட்டதாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டு களும் வெளியாகின. இதனால் ஹீரன் ஜோஷி தனது பதவியை ராஜினாமா செய்து தலைமறைவாகி உள்ளார். 2025  டிசம்பர் மாதம் முதல் அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை.  மீண்டும் இந்நிலையில், முடக்கப்பட்ட தாகக் கூறப்படும் மகாதேவ் சூதாட்ட செயலி தற்போது இந்தியா - இலங்கை  நாடுகளில் கூட்டாக நடைபெற்று வரும், டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மீண்டும் செயல் பாட்டில் வலம் வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மொபைல் ஆப்  மூலமாக இல்லாமல் வாட்ஸ் அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம், மகாதேவ்  சூதாட்ட செயலி செயல்பாட்டில் வலம் வருவதாக கூறப்படுகிறது. ஆனால் மோடி அரசு இதனை கண்டுகொள்ளா மல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

மேற்கு இந்தியத் தீவுகள் - இத்தாலி (குரூப் சி ) நேரம் : காலை 11:00 மணி இடம் :கொல்கத்தா, மேற்கு வங்கம் இலங்கை - ஜிம்பாப்வே   (குரூப் பி ) நேரம் :  மதியம் 3:00 மணி இடம் : கொழும்பு, இலங்கை

ஆப்கானிஸ்தான் - கனடா (குரூப் டி) நேரம் : இரவு 7:00 மணி இடம் : சென்னை, தமிழ்நாடு

சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஜியோ (தொலைக்காட்சி), ஹாட் ஸ்டார் (ஓடிடி)  தமிழ் உட்பட 5 மொழிகளில் நேரடி வர்ணனை வசதி செய்யப்பட்டுள்ளது.

யார் விளையாடினாலும் ஆதரவு அளிப்போம்! வெளிநாட்டு அணிகளை நெகிழ வைத்த தமிழ்நாடு ரசிகர்கள்

டி-20 உலகக்கோப்பை ஆட்ட ங்கள் தமிழ்நாடு தலைநகர் சென்னையிலும் நடைபெற்று வருகிறது. இந்தியாவை தவிர மற்ற வெளிநாட்டு அணிகள் விளையாடி வருகின்றன.  இந்திய அணி சென்னையில் விளையாடாவிட்டால் என்ன? எந்த அணி விளையாடினாலும் ஆதரவு அளிப்போம் என தமிழ்நாடு ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் குவிந்து, வெளிநாட்டு அணிகளை நெகிழ வைத்தனர். இதுதொடர்பான சிறப்பு படங்கள் :