விராட் கோலி தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த, பிற கேப்டன் பதவியையும் கைவிடலாம் என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி 20 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு 20 ஓவர் போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கனவே அறிவித்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது, விராட்கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து பிரிவுகளிலும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. மேலும் விராட் கோலி, கேப்டன் பதவியில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார். இதனை தொடர்ந்து கேப்டன் பொறுப்பின் போது அதிக பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை எதிர்கொண்டால், வரும் காலங்களில் தனது பேட்டிங்கில் கவனம் செலுத்த கேப்டன் பதவியை விட்டுக்கொடுக்கலாம். பேட்டிங்கில் முழு கவனத்தை செலுத்த அவர் வரும் காலங்களில் இந்த முடிவை எடுக்கலாம் என்று இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.