சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி கடந்த 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த், பிரணாய், கஷ்யப்,சமீர் வெர்மா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நேற்று நடைபெற்ற மகளிா் ஒற்றையா் அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து, ஜப்பானின் சனா கவாகமியை எதிா்கொண்டாா். 32 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 21-15, 21-7 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
இதையடுத்து இன்று நடந்த சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து சீன வீராங்கனை ஜி யீ வாங்கியை எதிர்கொண்டார்.
இந்த போட்டியில் 21-9,21-11,21-15 என்ற செட் கணக்கில் சீன வீராங்கனையை பி.வி.சிந்து வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
இது பி.வி.சிந்துவின் முதல் சிங்கப்பூர் ஓபன் பட்டமாகும். கொரியா ஓபன் மற்றும் சுவிஸ் வெற்றி பெற்ற பிறகு 2022ல் சிந்து வெல்லும் மூன்றாவது சாம்பியன் பட்டம் இதுவாகும்.