டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டென்மார்க் நாட்டில் நடந்து வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் தாய்லாந்து நாட்டின் பூசணன் ஓங்பம்ரங்பான் ஆகியோர் விளையாடினர்.
ஒரு மணிநேரம் மற்றும் 7 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில், பி.வி.சிந்து 21.16, 12-21, 21-15 என்ற புள்ளி கணக்கில் பூசணை வீழ்த்தினார்.
முதல் செட்டை கைப்பற்றிய சிந்து, அடுத்த செட்டில் தோல்வி கண்டார். 2வது செட்டை பூசணன் வெற்றி பெற்ற சூழலில் போட்டி 3-வது செட்டை நோக்கி சென்றது. இதில், சிந்து அதிரடியாக விளையாடி போட்டியை தன்வசப்படுத்தினார்