games

img

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்

டெல்லியில் நடைபெற்று வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய அணி மேலும் இரண்டு தங்கப்பதக்கம் வென்றது.
உலக கோப்பை துப்பாக்கி சூடு போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.  
இன்று நடைபெற்ற ஆண்கள் அணிக்கான 50 மீட்டர் ரைபிள் 3 நிலை பிரிவில், இந்திய வீரர்கள் நீரஜ் குமார், ஸ்வப்னில் குசாலே மற்றும் செயின் சிங் ஆகியோர் தங்கம் வென்றனர். இறுதிச் சுற்றில் அமெரிக்க அணியை, இந்திய அணி  25-47 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தற்போது இந்தியாவுக்கு 12வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 
12 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 27 பதக்கங்கள் பெற்று, பதக்க பட்டியலில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
 

;