இந்தியத் தடகள சம்மேளனத்தில் துணைத் தலைவராக இருக்கும் அஞ்சு பாபி ஜார்ஜூக்கு புதிய சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் தடகள துறை சிறந்த பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தான் நடத்தி வரும் அகாடெமி மூலம் இளம் வீரர், வீராங்கனைகளின் திறமையை மெருகேற்றி சர்வதேசப் போட்டிகளில் சாதிக்க வைக்கும் செயலுக்காக விருது கிடைத்துள்ளது. அஞ்சு பாபி ஜார்ஜ் நாட்டிற்காக பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் (2003 - பிரான்ஸ்) நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வரலாறு படைத்தவர். 2005-ஆம் ஆண்டு உலக தடகள தொடரில் தங்கம் வென்றும், ஆசிய காமன்வெல்த் தொடர்களில் பல்வேறு முறை பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இதுபோக இந்திய அளவில் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார்.