games

img

விளையாட்டு செய்திகள்

உலகக்கோப்பை டி-20 கிரிக்கெட் - 2024
இங்கிலாந்து அணி அபார வெற்றி

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் கூட்டாக நடைபெற்று வரும் 9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடரில் தற்போது “சூப்பர் 8” சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

வியாழனன்று நடைபெற்ற “சூப்பர் 8” சுற்றின் 2ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு  செய்த நிலையில், முதலில் களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு  180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்க வீரர் பிலிப் சால்ட்டின் (47 பந்துகளில் 87 ரன்கள்) அதிரடியின் உதவியால் 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப் பிற்கு 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இனி ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கும்

அமெரிக்க மைதானங்களை போல அல்லாமல் மேற்கு இந்தியத் தீவுகளின் மைதானங்கள் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டும் சரிசமமான அளவில் எடுபடுவதால் இனி ஒவ்வொரு ஆட்டமும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற “சூப்பர் 8” சுற்று ஆட்டங்களும் (தென் ஆப்பிரிக்கா - அமெரிக்கா,  மேற்கு இந்தியத் தீவுகள் - இங்கிலாந்து) அதிரடி பேட்டிங் முறையிலேயே நிறைவு பெற்ற நிலையில்,  இனி வரும் ஆட்டங்களும் இதேபோன்று நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா - வங்கதேசம்
இடம் : பார்படாஸ், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி

ஆஸ்திரேலியா - வங்கதேசம்
இடம் : பார்படாஸ், மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி

ஐரோப்பிய கோப்பை கால்பந்து - 2024
ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து ஆட்டம் டிரா

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடரில் தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. வியாழனன்று அதிகாலை நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து (“குரூப் ஏ”) அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  அணிகளும் முதல் பாதியிலேயே கோலடித்தன. எனினும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் வெற்றிக் கோலடிக்க முடியாமல் திணறிய நிலையில், ஸ்காட்லாந்து - சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் நிறைவடைந்தது.
 

ஸ்லோவேக்கியா - உக்ரைன்
நேரம் : மாலை 6:30 மணி
இடம் : டஸ்ஸல்டிரோப், ஜெர்மனி

போலந்து - ஆஸ்திரியா
நேரம் : இரவு 9:30 மணி
இடம் : பெர்லின், ஜெர்மனி

நெதர்லாந்து - பிரான்ஸ்
நேரம் : நள்ளிரவு 12:30 மணி
இடம் : லெயிப்ஜிக், ஜெர்மனி