games

img

விளையாட்டு

ஐரோப்பா நேஷன்ஸ் லீக் கால்பந்து போர்ச்சுக்கல் சாம்பியன்

ஐரோப்பா நேஷன்ஸ் லீக்  கால்பந்து தொடர் ஜெர்மனி யில் நடைபெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் ஞாயிறன்று நள்ளிரவு நடைபெற்ற நிலையில், இந்த ஆட்டத்தில் போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  தொடக்க நிமிடம் முதலே இரு அணி களும் அதிரடியாக விளையாடியதால், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் பரபரப்பாகவே நகர்ந்தது. முதல் பாதியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதனால் அந்த அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2ஆவது பாதியின் 61ஆவது நிமிடத்தில் போர்ச்சுக்கல் கேப்டனும், கால்பந்து உலகின் நட்சத்திர வீரருமான கிறிஸ்டி யானோ ரொனால்டோ அசத்தலாக கோலடித்தார். ஆட்டநேர முடிவில் (90 நிமிடம்) இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. கூடு தல் நிமிடத்திலும் (120)போர்ச்சுக்கல் - ஸ்பெயின் அணிகள் மேற்கொண்டு கோலடிக்காததால், பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. பெனால்டி சூட் அவுட் முடிவில் 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற போர்ச்சுக்கல் அணி இரண்டாவது முறையாக ஐரோப்பா நேஷன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியது. போர்ச்சுக்கல் அணி ஏற்கெனவே 2019 ஆம் ஆண்டில் ஐரோப்பா நேஷன்ஸ் லீக் கோப்பையை வென்று இருந்தது. அதே போல நடப்பு சாம்பியனான ஸ்பெயின் அணி (2023இல் சாம்பியன்) இரண்டாவது இடம் பிடித்தது.  ஜெர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி மூன்றாம் இடம் பிடித்தது.

5:29 மணிநேர போராட்டம் ஸ்பெயின் வீரர் அல்காரஸுக்கு குவியும் வாழ்த்து

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 124ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வந்தது. களிமண் தரையில் நடைபெற்ற, இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர் - தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸை எதிர்கொண்டார்.  தொடக்கத்தில் சின்னர் ஆதிக்கம் செலுத்தினாலும், 3ஆவது செட் முதல் அல்காரஸ் மிரட்டலான அதிரடி மூலம்  ஆதிக்கம் செலுத்த துவங்கினார். இறுதியில் ஸ்பெயினின் அல்காரஸ் 4-6, 6-7 (4-7), 6-4, 7-6 (7-3), 7-6 (10-2) என்ற செட் கணக்கில் 5:29 மணிநேரம் போராடி இரண்டாவது முறை யாக பிரெஞ்சு ஓபன் கோப்பையை கைப்பற்றி அசத்தி னார். 5ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள அல்காரஸ், 2024ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வென்று இருந்தார். அதே போல  முதல்முறையாக பிரெஞ்சு ஓபனில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்கிய இத்தாலியின் சின்னர்  2ஆவது இடத்துடன் வெளியேறினார்.

இத்தாலிக்கு 2 சாம்பியன் பட்டங்கள்

மகளிர் இரட்டையர் பிரிவில் இத்தாலியின் பவோலினி - ஏர்ராணி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. அதே போல கலப்பு இரட்டையர் பிரிவில் இத்தாலியின் ஆந்த்ரே - ஏர்ராணி ஜோடி  கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் பிரெஞ்சு ஓபனில் இத்தாலி 2 பட்டங்களை வென்று அசத்தியுள்ளது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் சின்னர் நூலிழையில் கோப்பையை நழுவவிட்டார். இல்லையென்றால் ஒரு கிராண்ட்ஸ்லாம்  போட்டியில் 3 சாம்பியன் பட்டங்களை வென்ற அணி என்ற பெருமையை இத்தாலி நாடு பெற்று இருக்கும்.