games

img

விளையாட்டு

ஐரோப்பா நேசன்ஸ் லீக் கால்பந்து  பிரான்ஸுக்கு அதிர்ச்சி அளித்த ஸ்பெயின்

ஐரோப்பா நேசன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஜெர்மனி யில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 70 நிமிடம் வரை ஸ்பெயின் அணி 4-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது. எனினும் கடைசிக்  கட்டத்தில் பிரான்ஸ் அணி வெற்றிக்காக கடுமையாக போராடி யது. ஆனால் இந்த போராட்டம் பலனளிக்கவில்லை. இறுதியில் ஸ்பெயின் அணி 5-4 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிக்கு முன்னேறியது.  திங்களன்று அதிகாலை நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் -  போர்ச்சுக்கல் அணிகள் பலப்பரீட்சை  நடத்த உள்ளன. முன்னதாக ஞாயிறன்று நடைபெறும் 3ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் மோதுகின்றன.

பிரெஞ்சு ஓபன் 2025 கோப்பையை கைப்பற்றுவது யார்? இன்று சபலென்கா - கவுப் பலப்பரீட்சை

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 124ஆவது சீசன் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது.  இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனிக்கிழமை அன்று நடைபெறும் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகா கவுப்பை எதிர்கொள்கிறார்.  இருவரும் இதுவரை பிரெஞ்சு ஓபன் கோப்பையை கைப்பற்றியதில்லை. அதனால் முதன்முறையாக பிரெஞ்சு ஓபனை கைப்பற்ற இரு வீராங்கனைகளும் தீவிர பயிற்சியுடன் களமிறங்குவார்கள் என்பதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  கோகா கவுப் ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபனில் இறுதி வரை முன்னேறி ஸ்வியாடெக்கிடம் (போலந்து)  கோப்பையை பறிகொடுத்தார். ஆனால் சபலென்கா முதன்முறையாக பிரெஞ்சு ஓபனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசுத்தொகை எவ்வளவு?

சாம்பியன் பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.24 கோடி இரண்டாமிடத்தை பெறும் வீராங்கனைகளுக்கு ரூ.12 கோடி அதேபோன்று  அரையிறுதி, காலிறுதி, ரவுண்ட்ஸ் பிரிவுகள், தகுதிச் சுற்றில் வெளியேறியவர்கள் என அனைவருக்கும் குறிப்பிட்ட பரிசுத்தொகை உள்ளது.

டிஎன்பிஎல் 2025 இன்றைய ஆட்டம்

திருநெல்வேலி - திருச்சி

இடம் : எஸ்என்ஆர் மைதானம் - கோவை நேரம் : இரவு 7:15 மணி சேனல் :  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2, பேன்கோடு (FAN CODE)