games

img

விளையாட்டு... ஐபிஎல் 2023

பெண் ரசிகைகள் என்ன காட்சி பொருளா? - எல்லை மீறும் ஜியோ சினிமா


16-வது சீசன் ஐபிஎல் தொடரில் தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலும், ஓடிடி பிரிவில் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரான அம்பானியின் ஜியோ சினிமாவும் ஒளிபரப்பு செய்கிறது. இதில் ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு செய்து வரும் நிலையில், ஜியோ சினிமா தனது ஒளிபரப்பில் போட்டி நேரங்களில் வீரர்க ளின் செயல்பாடு, எடுத்துக்காட்டு விவ காரங்களில் ஆர்வம் செலுத்தாமல் ரசிக ர்கள் என்ன செய்கிறார்கள், வானத்தில் என்ன பறக்கிறது என்ற வேலைகளில் மட்டும் ஆர்வமாக வேலை செய்கிறது. முக்கியமாக பெண் ரசிகைகளின் செயல் பாடுகளை ஒளிபரப்பு செய்கிறது. அதா வது பெண் ரசிகைகள் என்ன செய்கி றார்கள் என்பதை கண்காணித்து ஒளி பரப்புவதில் 25% வேலையாக உள்ளது ஜியோ சினிமா. இது விதிமுறைகளுக்கு எதிரானது. கத்தார் உலகக்கோபையில் அந்நாட்டு அரசு தனி கேமரா மூலம் பெண்கள் ஒழுங்காக உடை அணி கிறார்களா என்று கண்காணித்தற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. கத்தார் அரசு தனது நாட்டின் இஸ்லாமியா நெறி முறைகளின் படி பெண் ரசிகர்களின் உடைகளுக்கு கட்டுப்பாடு (ஆபாச உடை) விதித்தது. ஆனால் இந்தியாவில் அப்படி எதுவும் கட்டுப்பாடுகள் கிடை யாது. பிறகு ஏன் ஜியோ சினிமா இந்த கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டு வரு கிறது. பெண் ரசிகைகள் என்ன காட்சி பொருளா? வெற்றி அல்லது விக்கெட் நேரங்களில் ரசிகர்களின் கொண்டாட் டத்தை காண்பிப்பதே ஒளிபரப்பு நிறு வனங்களின் வேலை. தனிப்பட்ட நேரங்களில் யாரையும் கண்காணிக் கவோ, அவர்களின் செயல்பாட்டை காண் பிக்கவோ உரிமை இல்லை. முக்கியமாக பெண் ரசிகைகள் காட்சி பொருள் கிடையாது. இதனை தற்போதே கிள்ளி எரிந்தால் நல்லது. இல்லையென்றால் ஐபிஎல் தொடரை ஒரு சூட்டிங் ஸ்பாட் ஆக மாறும் நிலைமையை ஜியோ சினிமா கொண்டு வர வாய்ப்புள்ளது.

விளம்பரம் ஒளிபரப்ப  பயிற்சி வேண்டும்

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டின் பொழுது ஓவர் இடைவேளை, விக்கெட் இடை வேளை என இரண்டு நேரங்களில் விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படும். விக்கெட் விழுந்த உடன் 3-வது நடுவர் கேட்டால் விளம்பர ஒளிபரப்பு செய்யப்படாது. நடுவர் அறி விப்பு செய்யும் வரை பொறுத்திருந்து பிறகு விளம்பரம் செய்யப்படும். இதுதான் கிரிக்கெட் விளையாட்டின் விளம்பர இடைவேளை நடைமுறை. ஆனால் ஜியோ சினிமா கிடைத்த கேப்களில் விளம்பரம் செய்ய துடிக்கிறது. அதாவது விக்கெட் விழுந்த உடன் விளம்பரம், வீரர்களுக்கு காயம் என்றால் விளம்பரம், ரன் அவுட் அறிவிப்பின் இடைவெளியில் விளம்பரம் என விளம்பரத்தில் மட்டுமே குறியாக உள்ளது. 

ஜியோ சினிமாவில் பான் மசாலா, குட்கா விளம்பரங்கள் அதிகம்
கண்டுகொள்ளுமா தமிழ்நாடு அரசு?

ஐபிஎல் போட்டியின் பொழுது ஜியோ சினிமா ஒளிபரப்பு செய்யும் விளம்பரங்களில் பான் மசாலா, குட்கா (?) போன்ற விளம்பரங்கள் அதிகம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஜியோ சினிமா நாட்டின் அனைத்து மாநிலங்களில் ஒளிபரப்பு செய்யும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பான் மசாலா, குட்காவிற்கு தடை உள்ளது. ஆனால் பான் மசாலா, குட்கா தடை விதிக் கப்பட்ட மாநிலங்கள் ஜியோ விளம்பரத்தை பற்றி அறியா மல் உள்ளன. ஐபிஎல் தொடரை ஜியோ சினிமாவில் பார்ப் பவர்களில் 70% பேர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுப்பது நல்லது.

தமிழ்நாட்டில் இன்று ஐபிஎல் 8-வது வெற்றியை ருசிக்குமா சென்னை?

கொல்கத்தாவுடன் இன்று மோதல்

16-வது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 61-வது லீக் ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முதலி டத்துடன் முன்னேறும் வாய்ப்பை பெறலாம். தோற்றால் தனது கடைசி லீக் ஆட்டத்தில் தில்லி அணியுடன் கட்டாய வெற்றி மோதலை எதிர்பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று பற்றி கனவு காணும் பாதையில் நுழைய லாம். ஒருவேளை இந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால் கொல்கத்தா அணியின் பிளே ஆப் சுற்று கானல் நீராகும்.  சென்னை, கொல்கத்தா ஆகிய இரு அணிகளும் பிளே ஆப் சுற்று கனவுடன் களமிறங்குவதால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இன்றைய ஆட்டம்

சென்னை - தில்லி
இடம் : சேப்பாக்கம் மைதானம், சென்னை
நேரம் : இரவு 7:30 மணி

(சேனல் : தொலைக்காட்சி - ஸ்டார்  ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா. மெட்ரோ இலவசம்; ஐபிஎல் தொடரை நேரில் காண சேப்பாக்கம் செல்லும் ரசிகர்களுக்கு ஞாயிறன்று மெட்ரோ ரயில் இலவசம்)