பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு அர்ஷ்தீப் சிங் கேட்ச் முக்கிய காரணமாக இருந்தாலும், மேலும் பல்வேறு நிகழ்வுகள் தான் இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணங்களாக அமைத்துள்ளது.
1. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பதிலடிக்கு பெயர் பெற்றவர்கள் என்று நன்றாக தெரிந்தும் கத்துக்குட்டி அணியைப் போன்று எண்ணி விளையாடியது.
2.லீக் ஆட்டத்தில் இந்திய அணி வீரர்கள் துடிப்பாக பந்து வீசினர். ஆனால் “சூப்பர் 4” ஆட்டத்தில் சற்று மந்தமாக இருந்தனர்.
3. காயத்தால் ஜடேஜா இல்லாதது சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. சுழற்பந்துவீச்சை நன்றாக அடித்து விளை யாடும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அனுபவம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர்கள் இந்திய அணியில் இல்லாதது.
4. ஹர்திக் பாண்டையா மந்தமாக செயல்பட்டது.
5. இந்திய அணி பேட்டிங்கிற்கு சாதகமான பிட்சில் தொடக்கத் தில் நன்றாக விளையாடினாலும் 200 ரன்களுக்கு மேல் குவிக்காமல் கோட்டைவிட்டது.
6.எப்பொழுதும் 7-வது வீரராக களமிறங்கும் முகமது நவாஸை முன்கூட்டியே பாகிஸ்தான் களமிறக்கியது. நவாஸின் மிரட்டலான அதிரடியால் (20 பந்துகளில் 42 ரன்கள்) தான் இந்தியா தோற்றதற்கான மிகமுக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
7. பாகிஸ்தான் வீரர்கள் முதல் ஆட்டத்தில் தோற்றதால் அவர்களை பலவீனமாக நினைத்து கேப்டன் ரோஹித் சர்மா வீரர்களை அசமந்தமான கட்டளைகளை கொடுத்தது.
8. பாகிஸ்தான் அணியின் முதல் 9 ஆர்டர் வீரர்களும் பேட்டிங்கில் சிறந்தவர்கள் என்பதை உணராமல் முதல் 3 விக்கெட் விழுந்ததும் இந்திய அணி வீரர்கள் அசால்ட்டாக விளையாடியது.
இந்திய அணியின் தோல்விக்கு இவ்வளவு விஷயங்கள் இருந்தும் அர்ஷ்தீப் சிங் மீது விமர்சனத் தாக்குதல் நடத்துவது மிக மோசமான செயல் என்பது குறப்பிடத்தக்கது.