games

img

ஆஷஸ் தொடர் , ஆஸ்திரேலிய அணி மீண்டும் வெற்றி

நடப்பாண்டிற்கான பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரு கிறது. 5 போட்டிகளை கொண்ட இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் (பிரிஸ்பேன்) ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில், 2-வது டெஸ்ட் போட்டி அடி லெய்டு நகரில் உள்ள ஓவல் மைதானத்தில் வியாழ னன்று தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதல்  இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 473 ரங்களுடன் டிக்ளர் செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 236 ரன்களுக்கு ஆட்ட மிழந்தது.

237 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்களுடன் டிக்ளர் செய்து இங்கிலாந்து அணியின் வெற்றி இலக்காக 468 ரன்கள் நிர்ணயித்தது.  தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய வீரர் ரிச்சர்ட்சன் (5 விக்.) பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 192 ரன்களுக்கு ஆட்டமிழந்து படு தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகனாக லபுஸ் சாக்னே (ஆஸி) தேர்வு செய்யப்பட்டார். 3-வது டெஸ்ட் போட்டி “பாக்ஸிங் டே” என்ற பெயரில் கிறிஸ்துமஸ் தினத்தன்று (டிசம்பர் 26 - மெல்போர்ன் நகரில்) தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நடைபெறும் ஆஷஸ் கிரிக்கெட் போட்டிகள் “பாக்ஸிங் டே” என்ற பெயரில் நடத்தப்படுவது வழக்கம்.

;