games

img

விளையாட்டு செய்திகள்

டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை
சூப்பர் ஓவரில் திரில் வெற்றியை ருசித்த நமீபியா

மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடு களில் கூட்டாக நடைபெற்று வரும் 9 ஆவது சீசன் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது லீக் நடை பெற்று வருகிறது. திங்களன்று காலை நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் ஓமன் - நமீபியா (குரூப் பி) மோதின. 

டாஸ் வென்ற நமீபியா பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில், முத லில் களமிறங்கிய ஓமன் அணி 19.4  ஓவர்களில் 109 ரன்கள் எடுத்து ஆட்ட மிழந்தது. 

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்குடன் கள மிறங்கிய நமீபியா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஆட்டம் சமனில் முடிவடைந்தது. இத னால் வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் அமல்படுத்தப்பட்டது. சூப்பர் ஓவ ரில் முதலில் களமிறங்கிய நமீபியா அணி 6 பந்துகளுக்கு விக்கெட் இழப்பி ன்றி 21 ரன்கள் குவித்தது. 6 பந்து களில் 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், நமீபியா அணி நடப்பு சீசன் உல கக்கோப்பை தொடரில் தனது முதல் வெற்றியை ருசித்தது. 

இன்றைய  ஆட்டங்கள்
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், 
ஹாட் ஸ்டார் (ஒடிடி - இலவசம்)

ஆப்கானிஸ்தான் - உகாண்டா 
இடம் : கயானா, 
மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6:00 மணி

இங்கிலாந்து - ஸ்காட்லாந்து
இடம் : பார்படாஸ், 
மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : இரவு 8:00 மணி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : காலிறுதியில் இத்தாலியின் சின்னர்

களிமண் தரையில் நடை பெறும் ஒரே கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான, பிரெஞ்சு ஓபன் தொடரில் தற்போது ரவுண்ட் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. திங்களன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்ட த்தில் உலகத்தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் சின்னர், தரவரிசையில் இல்லாத உள்ளூர் வீரர் (பிரான்ஸ்) கோரன்டீனை எதிர் கொண்டார். தொடக்கம் முதலே பர பரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-6, 6-3, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் இத்தாலியின் சின்னர் கடும் போராட்டத்துடன் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். 

மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது  சுற்று ஆட்டத்தில் உலகத்தவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள கஜகஸ்தா னின் ரைபகினா, தரவரிசையில் 15ஆவது இடத்தில் உள்ள உக்ரை னின் சுவிட்டோலினாவை எதிர் கொண்டார். 

துவக்க செட் முதலே ஆக் ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைபகினா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

;