2014-ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை வென்றும், 2009, 2012-ஆகிய உலகக் கோப்பையில் போராடி கோப்பையை நழுவவிட்ட இலங்கை அணி வரவிருக்கும் 8-வது சீசன் டி-20 உலகக்கோப்பையில் எந்த அணியும் பின்பற்றாத வித்தியாசமான முறையில் அணியை தேர்வு செய்துள்ளது. 8 பேட்ஸ்மேன் (ஆல்ரவுண்டர் சேர்த்து), 12 பந்துவீச்சாளர்களுடன் (ஆல்ரவுண்டர் சேர்த்து) பிரம்மாண்டமாக ஆஸ்திரேலிய மண்ணில் கள மிறங்குகிறது. 15 பேர் கொண்ட அணியில் எந்த குறையும் இல்லை என்றாலும், பார்ம் பிரச்சனையில் சில வீரர்கள் உள்ள னர். அவர்களை களையெடுத்து ஆடும் லெவன் தேர்வை கவனமாக பார்த்துக்கொண்டால் தோல்வியை சந்திக்காமல் இலங்கை அணி ஆசியக்கோப்பை போன்று உலகக்கோப்பை யிலும் வெற்றிநடையுடன் வலம் வரும். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை போல களத்தில் எதையும் கண்டுகொள்ளாமல் வெற்றியை மட்டும் சிந்திக்கும் இலங்கை கேப்டன் சனகாவின் மாறுபட்ட கேப்டன்ஷிப் இலங்கை அணிக்கு கூடுதல் சாதகத்தை உருவாக்கும். இது போக ஆசியக்கோப்பை சாம்பியனான உற்சாகத்தில் வேறு இலங்கை அணி சூப்பர் பார்மில் களமிறங்குவதால் உலகக் கோப்பையில் கண்டிப்பாக இலங்கை அணி மிரட்டலாக விளையாடி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது.
வலுவான சிக்கலில் இலங்கை
மேலே கூறப்பட்டது எல்லாம் தற்போதைய இலங்கை அணியின் பார்ம் மற்றும் வலுவான சாதகமான சூழலை வைத்துக் கூறியது என்றாலும், இலங்கை அணி இந்தியா, ஆஸ்திரேலிய, பஸ்கிஸ்தான் அணிகளை போன்று உலகக் கோப்பையில் இன்னும் காலடி வைக்கவில்லை. தகுதி சுற்று பட்டியலில் தான் உள்ளது. தகுதி சுற்றில் (சூப்பர் 12) போராடி தான் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற வேண்டும். அதாவது மேற்கு இந்தியத் தீவுகள், நமீபியா, நெதர்லாந்து, யுஏஇ, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளு டன் மோதி அதன் பின்பு தான் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற வேண்டும். 2 டி-20 உலகக்கோப்பை வென்ற இலங்கை அணிக்கும் இதே நிலைமை தான். தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுகிறது. தரவரிசை யின் அடிப்படையில் 8 அணிகள் ஏற்கெனவே சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்கள் விபரம்
கேப்டன் : தசுன் ஷனகா (ஆல்ரவுண்டர்)
பேட்டிங் : பதும் நிசாங்கா
விக்கெட் கீப்பர் : குசால் மெண்டிஸ், பானுகா ராஜபக்சே
ஆல்ரவுண்டர் : தனுஷ்க குணதிலகா, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா,
பந்துவீச்சு : மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சமிகா கருணரத்னா, தில்ஷான் மதுசாங்க, பிரமோத் மதுஷன், துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா.
மாற்று வீரர்கள் : அஷேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ