games

img

டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் - ஆஸ்திரேலியா 2022

சூப்பர் 12ல் இலங்கை

வாழ்வா? சாவா? என்ற அடிப்படையில் தனது கடைசி தகுதி சுற்று ஆட்டத்தில் இலங்கை அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. தொடக்கம் முதலே மிகவும்  பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இலங்கை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று “சூப்பர் 12” சுற்றுக்கு தகுதி பெற்றது. (ஸ்கோர் : இலங்கை - 162/6 (20), நெதர்லாந்து - 146/9 (20))

“சூப்பர் 12” : குரூப் “பி” பிரிவில் பதற்றமான போராட்டம்

8-வது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் கடந்த தொடர்களை போல அல்லாமல் சற்று வித்தியாசமாக நடைபெற்று வருகிறது. அதாவது எப்பொழுதும் “சூப்பர் 12” சுற்று ஆட்டங்கள் தான் மிக பரபரப்பாக நடைபெறும். ஆனால் நடப்பு சீசனில் தகுதி சுற்று ஆட்டங்களே மிக பரபரப்பாக  நடைபெற்று வருகிறது. காரணம் இலங்கை, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் தகுதி சுற்றில் போராட, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே, நமீபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய கத்துக்குட்டி அணிகள் சீனியர் அணிகளை  போல அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த தகுதி சுற்று ஆட்டமே அரையிறுதி போல அமர்க்களமாக நடைபெற்று வருகிறது. வியாழனன்று மாலை 5 மணி நிலவரப்படி “குரூப் ஏ” இலங்கை அணி மட்டுமே “சூப்பர் 12” தகுதி பெற்றது. குரூப் “பி” பிரிவில் உள்ள 4 அணிகளும் (மேற்கு இந்தியத் தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து) ஆளுக்கொரு வெற்றியுடன் சரிசமமாக உள்ளன. இதனால் குரூப் “பி” பிரிவில் நடைபெறும் கடைசி தகுதி சுற்று ஆட்டங்களில் வெற்றி பெறும் 2 அணிகள் “சூப்பர் 12” சுற்றுக்கு முன்னேறும்.

இன்றைய ஆட்டங்கள்

மேற்கு இந்தியத் தீவுகள் - அயர்லாந்து
நேரம் : காலை 9:30 மணி

ஸ்காட்லாந்து - ஜிம்பாப்வே
நேரம் : மதியம் 1:30 மணி
இரண்டு ஆட்டங்களும் : ஹோபர்ட்