games

img

காஞ்சாநோவ் கடும் போராட்டம்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் 142-வது சீசன் அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோசை, ரஷ்யாவின் காஞ்சாநோவ் 7-5, 4-6, 7-5, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் 3:30 மணிநேரம் கடும் போராட்டத்துடன் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் அதிகம் எதிர்பார்த்த ஆஸ்திரேலியாவின் அஜிலாவை, துனிசியா வீராங்கனை ஜபியூர் 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். தொடக்க சுற்று முதலே மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அமெரிக்காவின் கவுபை காலிறுதி ஆட்டத்தில் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் புரட்டியெடுத்து அரையிறுதிக்கு முன்னேறினார் பிரான்சின் கார்சியா.

;