games

img

ஆசிய கோப்பை 5-ஆவது ODI: இந்தியா அபார வெற்றி!

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஒருநாள் போட்டியில் நேபாள அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி.

ஆசியக் கோப்பை போட்டி இலங்கையில் நடைபெற்று வருகிறது. நேபாளத்துக்கு எதிரான ஆட்டம் கண்டியில் நேற்று நடைபெற்றது. மழை பாதிப்பு ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டாஸ் வென்ற இந்தியா பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து நேபாளம், இறுதியில் 48.2 ஓவா்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

பௌலிங்கில் இந்தியா தரப்பில் அற்புதமாகப் பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா-3, முகமதுசிராஜ்-3 ஷமி-1, சா்துல்-1 விக்கெட்டைகளை வீழ்த்தினா்.

இந்தியாவுக்கு 231 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது நேபாளம்.

3.1 ஓவா்களில் 17/0 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

டக்வர்த் லீவீஸ் முறைப்படி 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் 21 ஓவரிலேயே இலக்கை அடைந்தது குறிப்பிடத்தக்கது.