மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் அனைவருமே பெண்களாக நியமித்து ஐசிசி அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இலங்கையில், செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் மகளிர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகளில் நடுவர்கள் குழுவை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) அறிவித்துள்ளது. அதில் பெண்களையே நடுவர்களாக ஐசிசி நியமித்துள்ளது. நடுவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய வீராங்கனைகள் ரிந்தா ரதி, ஜி.எஸ்.லக்ஷ்மி என்.ஜனனி, காய்த்ரி வேணுகோபாலன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தவிர, ட்ரூடி ஆண்டர்சன் (நியூசிலாந்து), ஷாண்ட்ரே ஃபிரிட்ஸ் (தென்னாப்பிரிக்கா) மற்றும் மைக்கேல் பெரேரா (இலங்கை), சூ ரெட்ஃபெர்ன் (இங்கிலாந்து), கிளேர் போலோசக் மற்றும் எலோயிஸ் ஷெரிடன் (ஆஸ்திரேலியா), கேண்டேஸ் லா போர்டே மற்றும் ஜாக்குலின் வில்லியம்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), கிம் காட்டன் (நியூசிலாந்து), சாரா டம்பனேவானா (ஜிம்பாப்வே), ஷதிரா ஜாகிர் ஜெசி (வங்காளதேசம்), கெரின் கிளாஸ்ட் மற்றும் லாரன் ஏஜென்பாக் (தென்னாப்பிரிக்கா) மற்றும் நிமாலி பெரேரா (இலங்கை) ஆகியோர் நடுவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.