5 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்க இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளது. இந்த சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வான முதல் டெஸ்ட் போட்டி வியாழனன்று தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. முகமது சிராஜ் தவிர ஜடேஜா (3), அஸ்வின் (3), அக்சர் (2), பும்ரா (2) ஆகி யோர் சிறப்பாக பந்துவீச இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 246 ரன்களுக்கு எடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது.