games

img

ஐபிஎல் 2024

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?
சென்னை - பெங்களூரு இன்று மோதல்

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சனியன்று நடைபெறும் 68ஆவது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும், பெங்களூரு அணியும் 
மோதுகின்றன. இரு அணிகளுக்கும் இந்த ஆட்டம் மிக மிக முக்கியமானதுஎன்ற நிலையில், ரசிகர்கள் இந்த ஆட்டத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

சென்னை
பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றால்  எவ்வித சிக்கலின்றி பிளே  ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். தோற்றால் பெங்களூரு மற்றும் தில்லி அணியுடன் ரன்ரேட் அடிப்படையில் முன்னணியில் இருந்தால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் சூழல் ஏற்படும். இதனால் பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றில் காலடி வைத்து விடலாம் என்ற எண்ணத்துடன் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகிறது சென்னை அணி.

பெங்களூரு
பிளே ஆப் சுற்று கனவுடன் களமிறங்கும் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய இடியாப்ப சிக்கல் உள்ளது. காரணம் தனது கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் பெங்களூரு அணி  களமிறங்குகிறது. வெற்றி பெற்றால் மட்டும் போதாது. சென்னை, தில்லி அணிகளை விட ரன்ரேட்டில் பின்னுக்குத்தள்ளினால் மட்டுமே பெங்களூரு அணி பிளே ஆப் சுற்று பற்றி கனவு காண முடியும். இது சாத்தியமாக பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்து 200 ரன்களுக்கு மேல் குவித்து, சென்னை அணி 18 ரன்களில் தோற்கடிக்க வேண்டும். இல்லையென்றால் சென்னை அணி கொடுக்கும் வெற்றி இலக்கை 18.2 ஓவர்களில் சேசிங் செய்திட வேண்டும். இதெல்லாம் அரங்கேறினால் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.

சென்னை - பெங்களூரு
(68ஆவது ஆட்டம்)

நேரம் : இரவு 7:30 மணி
இடம் : சின்னசாமி மைதானம், பெங்களூரு, கர்நாடகா
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்,  ஜியோ சினிமா (ஒடிடி - இலவசம்)

தரவரிசை

சென்னை 4ஆம் இடம் z பெங்களூரு 6ஆம் இடம்
ரன்ரேட்
சென்னை +0.528 z பெங்களூரு +0.387
(வெள்ளியன்று இரவு 8 மணி நிலவரம்)

மிரட்டும் மழை : சென்னை அணிக்கு வாய்ப்பு

பல்வேறு அதிரடி சுவாரஸ்ய சம்பவங்கள் நிகழும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் சென்னை - பெங்களூரு அணியின் ஆட்டம், ஏதோ ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தை போன்று முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை கெடுக்க மழை தயார் நிலையில் உள்ளது. சென்னை - பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூரில் நடைபெறுகிறது. பெங்களூரு நகர வானிலைப்படி அடுத்த ஒருவாரத்திற்கு பலத்த மழைக்கான வானிலை அம்சங்கள் உள்ள நிலையில், சென்னை - பெங்களூரு போட்டி நடைபெறும் நாளான சனியன்று பெங்களூரில் 80% வரை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மழை பெய்து ஓவர்கள் குறைக்கப்பட்டால், அது பெங்களூரு அணிக்கு சிறிதளவு சாதகமாக அமையலாம். ஆனால் ஆட்டம் கைவிடப்பட்டால் பெங்களூரு அணி வெளியேறிவிடும். சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.இறுதிக்கட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தாலும் ராஜஸ்தான், ஹைதராபாத் அணி மழையால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

;