games

img

கரிம் பென்சிமாவிற்கு பாலன் டி ஆர் விருது

ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து விளையாட்டில் சிறந்து விளங்கும் நபரை கவுரவிக்க பாலன் டி ஆர் விருது வழங்கப்படுகிறது. 66 ஆண்டுகால பாரம்பரியமிக்க இந்த பாலன் டி ஆர்  விருதை பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம் வழங்கி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான பாலன் டி ஆர் விருதுக்கான பரிந்துரை பட்டிய லில் (ஆடவர்) மொத்தம் 30 வீரர்கள் பரிந்து ரைக்கப்பட்டு இருந்தனர். இறுதியில் வாக்கெடுப்பு மூலம் பிரான்ஸ் வீரர் கரிம் பென்சிமா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சீசனில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்ஸ் லீக், லா லீகா போன்ற முக்கிய தொடர்களை வெல்வதற்கு கார ணமாக இருந்த கரிம் பென்சிமா அந்த  அணிக்காக (ஒரே ஆண்டில்) 46 ஆட்டங் களில் 44 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். கடந்த ஆண்டு விருதை அர்ஜெண்டினா கேப்டனும், கால்பந்து உலகின் தலைசிறந்த வீரருமான மெஸ்ஸி இம்முறை டாப் 3ல் (வாக்கெடுப்பில்) கூட இடம்பெறவில்லை. இருப்பினும் பாலன் டி ஆர் விருதை அதிகமுறை (7 முறை) வென்றவர் என்ற பெருமையை மெஸ்ஸி தன் வசம் வைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக போர்ச்சுக்கல் வீரர் ரொனால்டோ 5 முறை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யு-17 உலகக்கோப்பை இன்று ஆட்டங்கள் இல்லை

 

புரோ கபடி 2022

குஜராத் - உத்தரப்பிரதேசம்
நேரம் : இரவு 7:30 மணி
தமிழ்நாடு - பெங்களூரு
நேரம் : இரவு 8:30 மணி
இடம் : கண்டீவாரா மைதானம், பெங்களூரு

;