ஆசியக் கோப்பை டி-20 : இந்திய அணி அறிவிப்பு
17ஆவது சீசன் ஆசியக் கோப்பை டி-20 தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறு கிறது. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலை தேர்வு குழு தலைவர் அஜித் அகார்கர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். வீரர்கள் விவரம் : சூர்ய குமார் யாதவ் (கேப்டன்), சப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், பும்ரா, அர்சதீப் சிங், ஹர்சித் ராணா, வருண் சக்கர வர்த்தி, அக்சர் படேல், ஜித்தேஷ் சர்மா, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஸ்ரேயஸ் நீக்கம் ஏன்? ; ரசிகர்கள் கண்டனம்
ஆசியக் கோப்பை இந்திய வீரர்கள் அறிவிப்பில் சூப்பர் பார்மில் உள்ள முன்னணி வீரர்களான ஸ்ரேயஸ் ஐயர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்ஷன் ஆகியோர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏமாற்றமடைந்த இந்திய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்ற னர். இதில் கேப்டன் அந்தஸ்தில் உள்ள ஸ்ரேயஸ் ஐயர் புறக்கணிப்பே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேர்வுக்குழு மழுப்பல் இதுதொடர்பாக அஜித் அகார்கர் தலைமையிலான தேர்வுக் குழு கூறு கையில், “அணியில் 15 பேர் மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் மற்ற வர்களைக் கொண்டே தேர்வு குறித்து சிந்திக்க முடியும். யாருக்கு பதிலாக ஸ்ரேயஸை அணியில் எடுப்பது? என்ற சிக்கல் உள்ளது. இது ஸ்ரேயஸின் தவறும் அல்ல, எங்களுடைய தவறும் அல்ல. ஜெய்ஸ்வாலை தேர்வு செய்யா ததும் துரதிஷ்டவசமானது தான். அபி ஷேக் தற்போது நன்றாக பேட்டிங் மற்றும் பந்துவீசி வருகிறார். அதனா லேயே அவரை அணியில் சேர்த்தோம்” என கூறப்பட்டுள்ளது.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் 2025
100 ஆண்டு பழமையான சர்வதேச டென்னிஸ் தொடர்களில் ஒன்றான சின்சினாட்டி ஒபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் ஓஹியோ நகரில் நடைபெற்றது. இந்த தொடரின் கடைசி நிகழ்வுகளான மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டங்கள் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
ஸ்வியாடெக் சாம்பியன்
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள போலந்தின் ஸ்வியாடெக், தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள இத்தாலியின் பவோலினி மோதினர். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 7-5, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்ற, ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
அல்காரஸுக்கு பட்டம்
ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர், தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் அல்காரஸ் பலப்பரீட்சை மேற்கொண்டனர். முதல் செட்டில் அல்காரஸ் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். அப்போது காயம் காரணமாக ஜானிக் சின்னர் வெளியேற, அல்காரஸ் சின்சினாட்டி கோப்பையை கைப்பற்றினார். மகளிர் மற்றும் ஆடவர் ஒற்றையர் என 2 பிரிவுகளிலும் இத்தாலி வீரர் - வீராங்கனை (பவோலினி, சின்னர்) இறுதி வரை முன்னேறி கோப்பையை பறிகொடுத்துள்ளது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.