games

img

ஆஷஸ் 2வது டெஸ்ட் – சதமடித்து ஆட்டமிழந்த ஆஸி.வீரர்  

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் இரண்டாவது டெஸ்டில் ஆஸி. வீரர் மார்னஸ் லபுஷேன் சதமடித்துள்ளார்.  

இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஜனவரி 18 ஆம் தேதி முடிவடைகிறது. இதில் பிரிஸ்போனில் நடைபெற்ற முதல் டெஸ்டில், ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

இதனை அடுத்து 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். டேவிட் வார்னர் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. லபுஷேன் 95 ரன்களுடன் ஸ்மித் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.  

இன்றைய ஆட்டத்தில் 287 பந்துகளில் லபுஷேன் சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்பிறகு ராபின்சன் பந்தில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலிய அணி 105 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 32, டிராவில் ஹெட் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

;