games

img

இந்திய அணியின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நியூசி. சுழற்பந்துவீச்சாளர்  

இந்திய அணியின் மூன்று விக்கெட்களையும் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் வீழ்த்தியுள்ளார்.  

இந்தியா- நியூசிலாந்து இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.  

44 ரன்கள் எடுத்திருந்த போது அஜாஸ் பட்டேல் பந்துவீச்சில், ராஸ் டெய்லரிடம் கேட்ச் குடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா, அஜாஸ் பட்டேல் வீசிய 29.2 ஓவரில் ரன் எடுக்காமல் வெளியேறினார். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கோலி, அதே ஓவரில் அஜாஸ் படேல் வீசிய கடைசி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். 

28 மற்றும் 30 என அடுத்தடுத்து இரண்டு ஓவர்கள் வீசி, இந்திய அணியின் மூன்று விக்கெட்களையும் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றி இருக்கிறார்.  

தேநீர் இடைவேளையின் போது மயங்க் அகர்வால் 52 ரன்களிலும் , ஷ்ரேயாஸ் ஐயர் 7 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.

;