games

img

மனித உரிமைக்காக குரல் கொடுத்த வீரர்கள்

கத்தாரில் 22-வது சீசன் உலகக்கோப்பை பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே  விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டு நாடுகள் மனித உரிமைகளுக்கு ஆதரவாக மைதானத்திலேயே வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினர்.

ஈரான்

(தேசிய கீதம்)


ஈரான் நாட்டில் ஹிஜாப் உடை கட்டாயத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் வீரர்கள் தங்களது முதல் லீக் ஆட்டத்தின் (இங்கிலாந்துக்கு எதிராக) தொடக்க நிகழ்வின் பொழுது தங்கள் நாட்டு தேசிய கீதத்தை பாடாமல் தலைகுனிந்த படி எதிர்ப்பை பதிவு செய்தனர். இதன் காரணமாக ஈரானின் தேசிய தொலைக்காட்சி உல கக்கோப்பையில் அந்நாட்டு போட்டியின் நேரடி ஒளிபரப்பை நிறுத்தியது.

ஈரான் வீரர்களின் போராட்டத்தை அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் ஆதரிக்கவில்லை. வீரர்களுக்குள் திட்டமிட்டு  இந்த விவகாரம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை போட்டி நிறைவுபெற்ற பின்பு பார்த்துக்கொள்ளலாம் என ஈரான் அரசு மற்றும் அந்நாட்டு கால்பந்து சம்மேளனம் அமைதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

 

;