games

img

பிரான்ஸ் கால்பந்து கேப்டன் லோரிஸ் ஓய்வு

கால்பந்து உலகின் நட் சத்திர கோல் கீப்பரும், பிரான்ஸ் அணியின் கேப்டனுமான ஹியூகோ லோரிஸ் (36) சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவ தாக அறிவித்துள்ளார்.  1986-இல் பிறந்து 7 வயதில் கால்பந்து வாழ்க்கையை (செடாக் அணிக்காக) தொடங்கிய ஹியூகோ லோரிஸ் நைஸ், லயன் ஆகிய கிளப்  அணிகளிலும், பிரான்ஸ் நாட்டின் ஜூனி யர், சப்-ஜூனியர் ஆகிய அணிகளில் விளையாடி, 2008-ஆம் ஆண்டு பிரான்ஸ் தேசிய அணியில் இணைந்தார். 15 ஆண்டுகள் பிரான்ஸ் நாட்டின் தேசிய அணிக்காக கடினமாக உழைத்த லோரிஸ் 2018-ஆம் ஆண்டு ரஷ்ய உலகக்கோப்பை தொடரில் கேப்டன் பொறுப்பை ஏற்று சிறப்பாக அணியை வழிநடத்தி பிரான்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற கத்தார் சீசன் உலகக்கோப்பையிலும் லோரிஸ் தலைமையில் கேப்டனாக பிரான்ஸ் அணி அபாரமாக விளையாடினாலும், இறுதி ஆட்டத்தில் பலமான அர்ஜெண்டினாவை சமாளிக்க முடியாமல் பிரான்ஸ் அணி இரண்டாம்  இடம் பிடித்தது. இந்நிலையில், ஹியூகோ லோரிஸ்  திடீரென சர்வதேச கால்பந்து போட்டி களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சர்வதேச போட்டி களில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாலும் தான் விளையாடி வரும் கிளப் அணியான டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (இங்கிலாந்து கிளப்) அணியில் விளையாடுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.