games

img

விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாடுவாரா மெஸ்ஸி?

அடுத்தாண்டு (2026 - ஜூன், ஜூலை) அமெரிக்கா, கனடா,  மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக  23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் நாடுகளுக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகம் முழு வதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செப்., 5ஆம் தேதி நடைபெற்ற தென் அமெரிக்க கண்டத்திற் கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் வெனி சுலாவை 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா  அணி வீழ்த்தியது.  போட்டி முடிந்த பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் மெஸ்ஸி  பேசுகையில்,”கடந்த காலத்தில் நான் 39 வயதில் உலகக் கோப்பையில் விளையாடுவதில் கடினமாக இருப்பதாக கூறியிருந் தேன். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கின்றன. அது குறைவாக இருந்தாலும், எனக்கு அது நீண்ட காலம் என்பது தெரியும். உடல்நிலை நன்றாக உணரும் போது மகிழ்ச்சி யாக விளையாடுகிறேன். நன்றாக இல்லாத போது கடினமாக உணர்கிறேன். அதற்குப் பதிலாக விளையாடாமலே இருக்கலாம் என நினைக்கிறேன். தற்போ தைக்கு, ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு போட்டியையும் மட்டுமே  கவனத்தில் எடுத்துக்கொள்கிறேன். என்ன நடக்கிறது எனப் பார்ப்போம்” என அவர் கூறினார். மெஸ்ஸியின் இந்த பேச்சு 2026ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் கால்பந்து தொடரில் அவர் விளையாடு வாரா? என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது என ரசிகர்கள், விளை யாட்டு வல்லுநர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரி வித்துள்ளனர்.

சின்னர் - அல்காரஸ் இன்று பலப்பரீட்சை

அமெரிக்க ஓபன்  டென்னிஸ் கோப்பையை வெல்வது யார்?

சின்னர் - அல்காரஸ் இன்று பலப்பரீட்சை

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி யான அமெரிக்க ஓபன் டென்னிஸ்  தொடர் தற்போது இறுதிக்  கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், ஞாயிறன்று நடைபெறும் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தரவரி சையில் முதலிடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர், தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் பலப் பரீட்சை நடத்த உள்ளனர்.  நடப்பு சாம்பியனான சின்னர்  தொடர்ந்து 2ஆவது முறை யாக அமெரிக்க ஓபன் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்குகிறார்.  அதே போல 2 சீசனுக்கு பிறகு  மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் அல்காரஸ்  களமிறங்குகிறார். இரு வீரர்களும் கோப்பை மீது குறி யாக களமிறங்குவதால் இந்த  ஆட்டம் பரபரப்பாக நடைபெ றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் 2025   டிக்கெட் விலை ரூ.100

13 ஆவது சீசன் மகளிர் உலகக்கோப்பை  கிரிக்கெட் தொடர் இந்தியா - இலங்கை நாடுகளில் கூட்டாக செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த தொடருக்கான டிக்கெட் விற்பனை  டிக்கெட் விலை ரூ.100 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் மிக குறைந்த விலைக்கு  டிக்கெட் விற்பது இதுவே வரலாற்றில் முதல் முறையாகும். இந்தியாவில் நடைபெறும் போட்டிக்கு டிக்கெட் விற்பனை  செப்., 9ஆம் தேதி தொடங்குகிறது. ஜிபே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் பண பரிவர்த்தனை பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக பிசிசிஐ தரப்பில் கூறப் பட்டுள்ளது.