19-வது சீசன் ஆசிய விளை யாட்டுப் போட்டி சீனாவின் கடற்கரை சுற்றுலாதல நக ரான ஹாங்சோ நகரில் நடை பெற்று வருகிறது. 9-வது நாளான ஞாயிறன்று நடைபெற்ற ஆடவர் 3000 மீ ஸ்டிபிள் சேஸ் ஓட்டப்பந் தய பிரிவில் இந்திய வீரர் அவி னாஷ் முகுந்த் 8:19.50 நிமிடத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். ஜப்பான் வீரர் ரையோமா 8:23.75 நிமிடத்தில் வெள்ளிப்பதக்கமும், மற்றொரு ஜப்பான் வீரர் செய்யா 8:26.47 நிமி டத்தில் வெண்கலப்பதக்கமும் வென் றனர். டிராப் பிரிவில் தங்கம் ஆடவர் 50 மீ டிராப் துப்பாக்கிச் சுடுதல் அணி பிரிவில் செனாய் தரி யஸ், சந்து சிங், தொண்டைமான் பிருத்விராஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 361 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வென்றது. குவைத் அணி 359 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், சீன அணி 354 புள்ளி களுடன் வெண்கலப்பதக்கமும் வென்றன.
டிராப் பிரிவில் மேலும் 2 பதக்கம்
மகளிர் 50 மீ டிராப் துப்பாக் கிச்சுடுதல் அணி பிரிவில் ராஜேஸ் வரி, மணிஷா, பிரீத்தி ஆகியோர் அடங்கிய இந்திய அணி 337 புள்ளி களுடன் வெள்ளிப்பதக்கம் வென் றது. சீன அணி 357 புள்ளிகளுடன் தங்கப்பதக்கமும், கஜகஸ்தான் அணி 337 புள்ளிகளுடன் வெண் கலப்பதக்கமும் வென்றன. ஆடவர் 50 மீ டிராப் துப்பாக் கிச்சுடுதல் தனிநபர் பிரிவில் செனாய் தரியஸ் 32 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கம் வென் றார். இப்பிரிவில் சீன வீரர் 46 புள்ளி களுடன் தங்கப்பதக்கமும், குவைத் வீரர் டாடல் 45 புள்ளிகளுடன் வெள் ளிப்பதக்கமும் வென்றனர். கோல்ப் - வெள்ளி மகளிர் கோல்ப் தனிநபர் பிரி வில் அதீதி அசோக் 271 புள்ளிகளு டன் வெளிப்பதக்கம் வென்றார். தாய்லாந்து வீராங்கனை யுபோல் 269 புள்ளிகளுடன் தங்கப்பதக்க மும், தென் கொரியா வீராங்கனை யூ 272 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றனர். ஞாயிறன்று மாலை 5 மணி நில வரப்படி இந்தியா 12 தங்கம், 16 வெள்ளி, 16 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் 4-வது இடத்தில் உள்ளது.