facebook-round

img

அவனுக்கு இரண்டு பெயர்கள் !

மூதாதையர்கள்  சிந்திய

ரத்தம் முழுவதையும்

முதலில் அளந்தவன் அவனே !

 

உற்பத்திப் பொருட்களின்

ஓரத்தில் படிந்த

ரத்தத்தை பார்த்த

முதல் மனிதன் அவனே !

 

அவன்

மின்சாரத்தைப்

புத்தகங்களில் அடைத்து

மனிதனிடம் கொடுத்தான்

பிடித்தவர்கள்  தலைகளில்

பல்புகள் எரிந்தன ..

 

பனித்துளிகளை எல்லாம்

சேகரித்து

பாலருவியாய் ஓடவிடும்

பொறுமை அவனுக்கிருந்தது...

 

அவனுக்கு

விரக்தி வந்திருந்தால்

விரக்திக்கு மருந்து

கிடைத்திருக்காது ....

 

பழைய சமூக அமைப்பிற்கு

சவப்பெட்டி ஒன்றை

தன் கையாலேயே

செய்து முடித்த பின்தான்

மானுடம் அவனது சவப்பெட்டியில்

மங்காத ஒளிவிளக்கை

ஏற்றிவைத்தது ..

 

அவனுக்கு

இரண்டு பெயர்கள்

ஓன்று மார்கஸ்

மற்றொன்று உண்மை !!

 

--  கவிஞர் கந்தர்வன்.

;