facebook-round

img

எடுத்துச் சென்றதும் கொடுத்துச் சென்றதும் 2022ல் காலநிலை மாற்றம்

சிதம்பரம் இரவிச்சந்திரன்

காலநிலை மாற்றத்தின் பேரழிவு களின் ஆண்டாக இருந்த 2022ல் மனித குலம் கொடுத்த விலை மிகப்பெரியது என்று ஆய்வுகள் கூறுகின்றன. 2022ல் ஏற்பட்ட மிக மோசமான இயன் (Ian) ஹரிக்கேன் புயலிற்கு மனிதன் கொடுத்த விலை 100 பில்லியன் டாலர். உலகின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 1700 பேரின் உயிரைப் பறித்துச்சென்றது. 7 மில்லியன் மக்களை இடம்பெயரச் செய்தது. 2022ல் ஏற்பட்ட மிக மோச மான பத்து பேரிடர்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 3 பில்லியன் டாலர் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியது. 2022 பேரழிவுகளின் ஆண்டு கிறிஸ்டியன் எய்டு (Christian Aid) என்ற காலநிலை மாற்றம் பற்றி ஆரா யும் தன்னார்வ நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஏற்படும் பேரிடர் களை ஆய்வுகள் நடத்தி அறிக்கை வெளியிடுகிறது. அதன்படி 2022 காலநிலை மாற்றத் தினால் உண்டான பேரழிவுகளின் ஆண்டாக இருந் துள்ளது. மனிதக் குறுக்கீடுகளால் புவியின் வெப்பம் உயர்ந்து கன மழை, வறட்சி பூமியில் பல பகுதி களில் தாண்டவமாடியது. யுகே மற்றும் ஐரோப்பா வில் ஏற்பட்ட புயல்கள், வறட்சி இதில் அடங்கும்.
இயான் புயல்
செப்டம்பரில் அமெரிக்கா மற்றும் கியூபாவைத் தாக்கிய ஹரிக்கேன் இயான் பேரழிவுகளின் பட்டிய லில் 100 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தி முத லிடத்தைப் பெற்றது. இதில் 130 பேர் உயிரி ழந்தனர். 40,000 பேர் இடம்பெயரவேண்டி ஏற்பட்டது. ஜூன் செப்டம்பர் காலத்தில் பாகிஸ்தானில் ஏற்பட்ட பெருவெள்ளம் 1739 பேரின் உயிரைப் பறித்துச்சென் றது. 7 மில்லியன் மக்கள் வாழிடத்தை விட்டு வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு 5.6 பில்லியன் டாலர்.
பேரிடர்களின் பட்டியல்
இது காப்பீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட தொகை. ஆனால் உண்மையில் இழப்பின் அளவு 30 பில்லியன் டாலருக்கும் கூடுத லாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்ற னர். மலேசியா, பிரேசில்மற்றும் மேற்காப்பிரிக்கா வில் ஏற்பட்ட வெள்ளம், ஆப்பிரிக்காவின் செழுமை யான கொம்புப்பகுதி (Horn of Africa) என்று அழைக்கப்படும் பகுதியில் நிலவும் வறட்சி, இந்தியா, பாகிஸ்தானில் ஏற்பட்ட வெப்ப அலைவீச்சு கள், ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவில் நிலவிய அதிதீவிர வெப்பநிலை போன்றவை இதில் அடங்கும். சிலியில் நிகழ்ந்த காட்டுத்தீ, தென்கிழக்கு ஆப்பி ரிக்கா மற்றும் பிலிப்பைன்ஸில் வீசிய கடும் புயல்கள், பங்களாதேஷைத் தாக்கிய சுழற்காற்று ஆகியவை 2022ல் நிகழ்ந்த மற்ற மோசமான பேரழிவுகள் என்று ஆய்வு கூறுகிறது. யுகே, அயர்லாந்து, ஐரோப்பா வின் மற்ற பகுதிகளை பிப்ரவரியில் தாக்கிய யூனிஸ் (Eunice) புயல் அப்பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். 4.3 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.
ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி                                                                                                                                                                                                                                                                                                                                                                                              காலநிலை மாற்றத்தினால் ஐரோப்பாவில் நீண்ட காலம் ஏற்பட்ட வறட்சி 20 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியதுடன் விளைச்சல் குறைவு, விலைவாசி உயர்வு, ஆற்றல் உற்பத்தி மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பாதித்தது. பிரேசில் வறட்சி 4 பில்லியன் டாலர் இழப்பை ஏற்படுத்தியது. பிப்ரவரி-மார்ச் வரை ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 27 பேர் உயிரிழந்தனர். ஏப்ரலில் தெற்காப்பிரிக்காவில் உண்டான வெள்ளத்தில் 459 பேர் மரணமடைந்தனர். இந்நிகழ்வுகளால் பில்லியன் கணக்கான டாலர்கள் இழப்பு ஏற்பட்டா லும் சூழல் காக்க உருப்படியாக எதை யும் செய்யாத ஆட்சியாளர்களின் செயல் திறனற்ற கொள்கைகளால் விலை மதிப்பிடமுடியாத மனித உயிரிழப்பு களும், வாழ்வாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு பேரிடருக்கும் பின்னால் மில்லியன் கணக்கான மனிதர் களின் சோகக்கதைகள் இருப்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்று கிறிஸ்டியன் எய்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் பாட்ரிக் வாட் (Patrick Watt) கூறுகிறார். பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ் வைக் குறைக்க எதுவும் செய்யாவிட்டால் இந்த இழப்புகளின் அளவு வரும் ஆண்டு களில் அதிகரிக்கவே செய்யும். சீறிப் பாய்ந்து வரும்வெள்ள நீரில்  அடித்துச்செல்லப்படும் வீடுகள், வீசும் கொடும் புயற்காற்றால் உற்றார் உறவினரை இழந்து தவிக்கும் ஏழைக் குடும்பங்கள், வறட்சியின் கொடு மையால் அழிக்கப்படும் வாழ்வாதாரம் போன்றவை 2022ம் ஆண்டை காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்ட மிக மோசமான ஆண்டாக்கியுள்ளது. பேரிடர்கள் நிகழ அதிக வாய்ப்புள்ள இடங்களில் வாழ்பவர்களே இதில் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்று வாட் கூறுகிறார். விலைமதிக்கமுடியாத உயிரி ழப்புகள், அதனால் அனாதையாக்கப்படும் குடும்பங் களின் துயரங்களுக்கு மெத்தனப்போக்குடன் பொறுப்பற்ற முறையில் ஆள்பவர்களே பதில் சொல்லவேண்டும். எகிப்து ஷெர்ம் எல்-ஷேக்கில் நவம்பரில் நடந்த காப் 27 காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில் பணக்கார நாடுகளின் அசுர நுகர்வினால் உருவாகும் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை ஏழை நாடுகள் சமாளிக்க நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது 2022ன் ஆறுதல் தரும் செய்தி. இந்த நிதியம் உடனடி யாக செயல்படுத்தப்படாவிட்டால் வரப்போகும் ஆண்டுகள் இந்த ஆண்டை விட மனிதகுலம் தாங்கமுடியாத பேரழிவுகளை ஏற்படுத்தும் ஆண்டுகளாகவே அமையும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

;