facebook-round

img

பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் இருக்கவே இருக்கிறது காஷ்மீர் பிரச்சினை! -ஆர் விஜயசங்கர்

இந்தியாவின் கார் உற்பத்தியில் சென்னையின் பங்கு 30 சதவீதம். உதிரி பாகங்கள் உற்பத்தியில் 35 சதவீதம். இதனால் சென்னை இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. (அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான டெட்ராய்ட்டில்தான் கார் உற்பத்தியில் ஜாம்பவான்களான ஜெனரல் மோட்டர்ச். ஃபோர்ட், க்ரைஸ்லர் இங்கிருந்துதான் கொடி கட்டிப் பறந்தன. இதனால் டெட்ராய்ட்டுக்கு மோட்டர் சிடி என்ற பெயரே இருந்தது. இன்று பல காரணங்களால் அந்நகரம் வீழ்ந்து விட்டது.)
சென்னையில் கார் உற்பத்தித் தொழிலில் ஏற்பட்டிருக்கும் சரிவு குறித்து பல செய்திகளும், பதிவுகளும் வந்து விட்டன. ஆனால் இந்த சரிவு அத்தொழிலில் நேரடியாக ஈடுபடாதவர்களையும் பாதிக்கும் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
கார் உற்பத்தியில் ஒரு வேலை போனால் அதனுடன் தொடர்புள்ள 18 வேலைகள் போகும் அபாயம் உள்ளது. 
பூனா, டெல்லி, மும்பை நகரங்களிலும் இதுதான் நிலைமை.

இந்த நேரத்தில் 5 லட்சம் கோடிப் பொருளாதாரத்தை உருவாக்குவோம் இன்று செங்கோட்டையில் இருந்து மோடி பேசுகிராரென்றால் அதைக் கேட்டு குதூகலமடையும் புத்திசாலிகள் இருக்கிறார்கள் என்பதால்தான். 
பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தால் இருக்கவே இருக்கிறது காஷ்மீர் பிரச்சினை!

-Vijayasankar Ramachandran

;