சமூகம், வரலாறு, மார்க்சியம், தலித்தியம், பெரியாரியம் என இந்த மண்ணை வலப்படுத்திய மக்களை மேம்படுத்திய அனைத்து அரசியல் போக்குகளையும் நுனுக்கமாக உரையாடி, ஆராய்ந்து, அவைகளை மக்களுக்கு புரியும் எளிய வார்த்தைகளில் எழுதி தன் வாழ்நாளெல்லாம் கொடுத்தார்.
மக்களை நேசித்தார் அவர்களை அரசியல் படுத்த வேண்டும், இந்த மண்ணிற்கான தங்கள் உயிரை நீத்தவர்களை நாம் மறக்கல் ஆகாது அவர்களை ஆவணப்படுத்துவதின் வழியே தான் அவரக்ளின் தியாகங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதை நம்பியவர்.
80 நூல்கள் வெளிவந்துள்ளது, ஒவ்வொன்றும் குறைந்தது 6000-10000 பிரதிகள் விற்பனையான நூல்கள், இத்தனை மலிவு விலையில் புத்தகங்களை பதிப்பித்து அவைகளை அவரது மேற்பார்வையில் பண்டல் போட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கு அனுப்பும் வரை அவர் ஓயமாட்டார். ஒரு வாழும் பல்கலைக்கழகம், தன் தோல் பையே ஒரு ஆவணக்காப்பகம் என வாழ்ந்தவர் என்.ராமகிருஷ்ணன்.
80 புத்தகங்கள் எழுதியவர் தனக்கு எல்லாம் தெரியும் என கெத்து காட்டியதில்லை. எளிமை எளிமை எளிமை தான் அவரது தாரக மந்திரம், அவர் எங்கே இருக்கிறார் என்பதையே கொஞ்சம் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும். இருக்கும் இடத்தில் சத்தமே இல்லாமல் குணிந்தபடி வேலை செய்து கொண்டேயிருப்பார், கையில் மை பேனாவுடன் ஒரு காகித குவியலுக்குள் இருப்பார். நிச்சயம் நேற்றும் கூட எதையாவது எழுதிக் கொண்டே அல்லது அடுத்த நூல் குறித்த யோசனையில் இருந்தபடியே தான் விடை பெற்றிருப்பீர்கள் தோழர்.