பிற்போக்கு அரசியல்வாதிகள் நாட்டுப்பற்றுள்ளவர்கள் போல் பாசாங்கு செய்வதையும் அதனை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை காண்கிறோம் .
நாடு என்பது 20 ம் நூற்றாண்டில் முதல் உலக யுத்தம் முடிவில் மன்னர் சாம்ராஜ்யவாதம் ஒழிக்கப்பட்டு எல்லைகளையும் ஓரே நாணய மண்டலமாகவும் கொண்ட நாடுகள் உருவாகின.. வள்ளுவர் காலத்தில் நாடு என்றால் ஒரு அரசனின் ஆளுகைக்கு உட்பட்ட இடமாகும். மக்களின் ராஜ விசுவாசமே எல்லைகளைத் தீர்மானித்தன. போரில் தோற்ற மன்னனும், வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்ணும் அவமானச் சின்னங்களாக கருதி மக்கள் வெறுத்தனர்..
முதன் முதலாக முதலாளித்துவ உற்பத்திமுறைக்கு மாறிய நாடுகளில் தான் ராஜவிசுவாசம் மறைந்து நாட்டுப்பற்று உருவாகின. அந்த நாடுகள் . அதாவது .
மன்னர்களின் கட்டளைக்குப் பதிலாக அரசையே நெறிப்படுத்தும் நவீன சட்ட ஆட்சி முறையையும் எல்லைகளையும் கொண்ட நாடுகள் உருவாகின., முதலாளித்துவ உற்பத்தி முறைக்கும் , சந்தைப்படுத்துதலுக்கும் அது அவசியப்பட்டதால் உருவானது. 1914ல் உலகில் 55 நாடுகளே இருந்தன அந்த பட்டியலில் அன்று இந்தியா இல்லை 1952ல்தான் இந்தியா உருவானது.. இன்று 193 நாடுகள் உள்ளன.. பாட்டாளிவர்க்க சர்வ தேசிய கோட்பாடு இந்த நாடுகளிடையே ஒத்துழைப்பை உருவாக்கும் நோக்கம் கொண்டது. முதலாளித்துவ உலகமயம் என்பது ஏகாதிபத்திய நாடுகளின் நாணய ஆதிக்கத்தை விரிவாக்கும் நோக்கம் கொண்டது. 1945லிருந்து டாலரே சர்வதேச செலவாணியாக உலக வர்த்தகத்தை ஆண்டுவருகிறது.
2008க்குப்பிறகு உலக நாடுகள் டாலரின் ஆதிக்கத்தை எதிர்க்கவும் ஒரு பொதுவான நாணயத்தை உருவாக்கவும் முயற்சிகள் துவங்கியுள்ளன. ஆனால் 193 நாடுகளில் முதலாளித்துவ நாடுகள்தான் பெரும்பான்மையாக உள்ளன. அங்குள்ள முதலாளிகள் உலக மயத்தால் தங்களது சொத்துக்களை டாலர் வடிவில் திரட்டி பங்குச்சந்தையில் முதலீடு செய்திருப்பதால் இந்த மாற்றத்தை விரும்பவில்லை.. டாலரின் ஆதிக்கத்தைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
டாலரின் ஆதிக்கத்தை ஏற்க மறுத்தால் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபடுவோம் என்கின்றனர்.. இதில் மோடி அரசு எந்தபக்கம் நிற்கிறது. டாலரின் ஆதிக்கத்தை எதிர்க்கும் பிரிக்ஸ் அமைப்பில் சீனாவோடு கைகோக்கிறது. மறுபக்கம் டாலரின் ஆதிக்கத்தை பாதுகாக்க அமெரிக்கா, ஜப்பான் இந்தியா ராணுவ கூட்டு என்று கை கோர்த்து நிற்கிறது. டாலர் இல்லாமலே வர்த்தக உறவை உருவாக்க வட்டார சுதந்திர வர்த்தக அமைப்பில் சேர மறுக்கிறது..இந்திய முதலாளிகள் லாபங்களை டாலராக மாற்றி உலக பங்குச்சந்தையில் முதலீடு செய்வதை பாதுகாக்கிறது.
மோடியார்கள் முழங்கும் “தேச பக்தி” என்பது இந்த மண்ணையும், மக்களையும் நேசிப்பதற்கல்ல! வாழ்விற்கு போராடும் மக்களை அடக்கி அடிமைகளாகக் கிடத்திடவே! உதிர்க்கும் சொல்.
-Meenatchi Sundaram