பள்ளி விடுமுறை
உணவின்றி தவிக்கின்றன
ஏழை குழந்தைகள் ...!!
***
பள்ளி விடுமுறை
உடைந்தன கோலி குண்டுகள் ..
விளையாடும் சிறுவர்கள் ...
***
பள்ளியில் கொடியேற்றம்
மிட்டாய் கிடைத்த மகிழ்ச்சியில்
குழந்தைகள் ....!!
***
மலையை மூடியது மேகம் ..
தரையிறங்கியது
வானத்து பறவைகள் ....!!
***
சூரிய ஒளி நெருங்க நெருங்க
சுருக்கிக் கொண்டது ..
மரத்தின் நிழல் ....!!!
சுதந்திர இந்தியா
வறுமை தீரவில்லை ..
மூவர்ணக் கொடி விற்கும் சிறுமி ...
***
மழை நின்ற மத்தியான வெயில்
பாறையில் ஊர்கின்றன
எறும்புகள் ....!!
***
சூரிய ஒளி கண்டதும்
நகர்கின்றது ...
கோபுரத்தின் நிழல் .....!!
***
கிளையில் தொங்குகிறது
கழற்றிப் போட்ட
பாம்பின் சட்டை ....!!
***
பாதி திறந்த கதவு
கோணலாக உள் நுழைகிறது ...
சூரிய கதிர்கள் ....!!
-ச. ராஜ்குமார்
திருப்பத்தூர் மாவட்டம்
8867933021