பவன் கல்யாண் படிகளை
கழுவிக் கொண்டிருந்த
அதே வேளையில் தான்
முப்பது லட்சம் லட்டுகளை
வாங்கிச் சென்றிருக்கிறார்கள் ஏழுமலையானின் பக்தர்கள்..
ஸ்ரீரங்கம் அரங்கநாதர்
சன்னிதியில் வீற்றிருக்கும்
சுரதானி எனும் துலுக்க
நாச்சியாருக்கு படைக்கும்
ரொட்டி வெண்ணெயை
பேதமின்றி ஏற்றுக் கொள்கிறார்
பள்ளி கொண்ட பெருமாள்.
பகல் பத்து வழிபாட்டில்
அவருக்கு லுங்கி உடுத்தி
வழிபடுகிறார்கள் பக்தர்கள்..
சரபோஜி மன்னர் கட்டிய
தர்காவில் நாகூர் ஆண்டவர்
பூவும் பூஜை பொருட்களோடும்
அலங்கரிக்கப்பட்டிருக்கும்
"செட்டி பல்லக்கில்" தான்
இன்றளவும் பவனி வருகிறார்..
சபரிமலையில் வீற்றிருக்கும்
இஸ்லாமிய 'வாவர் சன்னதி' யில்
மிளகு காணிக்கையை அளித்த
பிறகே ஐயப்பனை காணச்
செல்கிறார்கள் அவரது பக்தர்கள்.
திப்புவின் மானியம் இல்லாத
கோவிலும் இல்லை. நாயக்க
மன்னர்களின் கொடையில்லாத
பள்ளிவாசல்களும் இல்லை
என்பதே நமது மண்ணின் சிறப்பு..
கடவுளுக்கும் பக்தர்களுக்கும்
இடையில் கட்ட பஞ்சாயத்து
செய்ய யாரும் இங்கே சொம்பை
தூக்கிட்டு வரத் தேவையில்லை..
-ஆர்.பத்ரி மாநிலக்குழு உறுப்பினர்