facebook-round

img

எந்த இந்துக்களை நீங்கள் பாதுகாப்பீர்கள்..? - ஆர்.பத்ரி

கார்ப்பரேட்டுகளுக்கு
14 லட்சம் கோடி
வரிச்சலுகையும்
24 லட்சம் கோடி
கடன் தள்ளுபடியும்
அவசியம் தானா..?
என்று கேட்டதற்கு
'அந்த 38 லட்சம் கோடியை
பெட்ரோல் டீசல் வரியில்
சமன் செய்து விட்டோமே' என
சாமர்த்தியமாக பதிளித்தார்கள்..
இந்துக்களின் பாதுகாவலர்கள்
என எப்போதும் சொல்கிறீர்களே
அல்லல் படும் ஏழைகள்
ஆதாயம் அடையும் செல்வந்தர்
இவர்களில் எந்த இந்துக்களை 
நீங்கள் பாதுகாப்பீர்கள்..?
எனும் அடுத்த கேள்விக்கு
'நீ இந்தியாவின் விரோதி'
கோபமாக பதிலளித்து விட்டு
மசூதிக்கு கீழே கோவிலை தேடி
கும்பலாக போய்விட்டார்கள்..
- ஆர்.பத்ரி, சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்